Home /News /sports /

ஒரு தலைமுறைக்கே ஊக்கமாக இருந்த விராட் கோலி - ஹாங்காங் அணியின் ஜெர்சி பரிசு

ஒரு தலைமுறைக்கே ஊக்கமாக இருந்த விராட் கோலி - ஹாங்காங் அணியின் ஜெர்சி பரிசு

விராட்கோலி

விராட்கோலி

Virat Kohli | தங்கள் அணியின் ஜெர்சியை பரிசாக அளித்த ஹாங்காங் அணிக்கு விராட் கோலி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஹாங்காங் அணிக்கு எதிராக நேற்று அரைசதம் அடித்த  விராட் கோலியின் இன்னிங்ஸை பார்த்து அவரால் ஊக்கம் பெற்றோம் என்றும் கூறி ஹாங்காங் அணி தங்களது அணியின் ஜெர்சியை பரிசளித்துள்ளனர். இதற்கு முன்பாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ராவுஃபுக்கு அன்றைய போட்டி முடிந்தவுடன் விராட் கோலி தன் கையெழுத்திட்ட ஜெர்சியை பரிசாக அளித்து தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஊக்கம் காட்டியது பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில் நேற்று நடந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா,ஹாங்காங்குடன் மோதியது. டாஸ்' ஜெயித்த ஹாங்காங் கேப்டன் நிஜாகத்கான் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். 20 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும் (26 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்), விராட் கோலி 59 ரன்களுடனும் (44 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.

Also Read : சூரியகுமார் யாதவை சிரம் தாழ்த்தி வணங்கிய விராட் கோலி - வைரல் வீடியோ

பின்னர் மெகா இலக்கை நோக்கி ஆடிய ஹாங்காங் 20 ஓவர் முழுமையாக ஆடி அந்த அணி 5 விக்கெட்டுக்கு 152 ரன்களே எடுத்தது.இதனால் இந்தியா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இந்த நிலையில் போட்டி முடிந்ததும் விராட் கோலிக்கு ஹாங்காங் அணி வீரர்கள் தங்களது அணியின் ஜெர்சியை பரிசளித்துள்ளனர்.

அந்த ஜெர்சியில் ஒரு தலைமுறைக்கே ஊக்கமாக இருந்ததற்கு நன்றி. நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் என எழுதி பரிசாக அளித்துள்ளனர். இதனை விராட் கோலி, நன்றி ஹாங்காங் இது என்னை எளியனாக்கியுள்ளது, மேலும் இனிமையானது என தெரிவித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Published by:Vijay R
First published:

Tags: Asia cup, Virat Kohli

அடுத்த செய்தி