“உங்களது வேலை அதுவல்ல” - ராஸ் டெய்லரால் கொதிப்படைந்த பாக். கேப்டன்

மூன்று முறை பந்துவீச தடைக்கு உள்ளான ஹபீஸ், விதிப்படி அவர் தன்னை திருத்திக்கொண்டதை அடுத்து மீண்டும் பந்துவீச அனுமதிக்கப்பட்டார்.

Web Desk | news18
Updated: November 8, 2018, 10:40 PM IST
“உங்களது வேலை அதுவல்ல” - ராஸ் டெய்லரால் கொதிப்படைந்த பாக். கேப்டன்
ராஸ் டெய்லர்
Web Desk | news18
Updated: November 8, 2018, 10:40 PM IST
தன்னுடைய பந்துவீச்சை களத்திலேயே விமர்சித்த நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ், “பந்துவீச்சை கண்காணிப்பது உங்களது வேலை அல்ல நடுவரின் வேலை” என்று கூறியுள்ளார்.

நியூஸிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. நியூஸிலாந்து வீரர் ராஸ் டெய்லர் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, சுழற்பந்து வீச்சாளர் முகம்மது ஹபீஸ் பந்துவீசினார். ஒரு பந்தை எதிர்கொண்ட டெய்லர், ஹபீஸ் பந்தை எறிகிறார் என்பது போல சைகை காட்டினார். ஆனால், அவர் நடுவருக்கு சைகை காட்டினாரா? அல்லது எதிரே நின்ற மற்றொரு பேட்ஸ்மேனுக்கு காட்டினாரா? என்பது தெரியவில்லை.

Loading...


டெய்லரின் சைகையை அடுத்து மற்றொரு பாகிஸ்தான் வீரர் சர்பராஸ் நடுவர்களிடம் சென்று ஆவேசமாக வாதிட்டார். இதனை அடுத்து, டெய்லரிடமும் சென்று ஹபீஸ், சர்பராஸ் வாதிட்டனர். நடுவர்களின் தலையீட்டுக்கு பின் போட்டி மீண்டும் தொடங்கியது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெய்லர் 80 ரன்கள் அடித்தார்.

போட்டி முடிந்த பின்னர் பேசிய கேப்டன் சர்பராஸ், “டெய்லர் செய்தது சரியல்ல. அது அவர் வேலையல்ல. மிகவும் இழிவான செயல். அவர் வேலை பேட்டிங் செய்வது மட்டுமே. அவரது செயல்பாடு விளையாட்டு உணர்வுக்குள் இல்லை என்பதை நடுவரிடம் நான் தெரிவித்தேன். ராஸ் ஒரு தொழில்பூர்வ கிரிக்கெட் வீரர், அவர் இப்படி செய்வதாகாது. 2-3 முறை ஹபீஸ் ஆக்‌ஷனை அவர் மிமிக் செய்தார். இது நடுவர்களின் வேலை. டெய்லர் வேண்டுமென்றே இதனைச் செய்துள்ளார்.” என ஆவேசமாக கூறினார்.

கை ஒருவிதமாக சுழற்றிப் பந்துவீசும் ஹபீஸ் ஏற்கனவே மூன்று முறை பந்துவீச தடைக்கு உள்ளாகியுள்ளார். அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் கையை சுழற்றவேண்டும் என்ற விதிப்படி அவர் தன்னை திருத்திக்கொண்டதை அடுத்து மீண்டும் பந்துவீச அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்..

இப்படி ஒரு பவுலிங்கா? 360 டிகிரியில் பந்துவீசி குழப்பத்தை ஏற்படுத்திய பவுலர்!

Also See..

First published: November 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்