• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டெய்லர் சதம் வீண்... ஜிம்பாப்வே - வங்கதேசம் டெஸ்ட் தொடர் டிரா

டெய்லர் சதம் வீண்... ஜிம்பாப்வே - வங்கதேசம் டெஸ்ட் தொடர் டிரா

வங்கதேச அணி வெற்றி (Twitter/ICC)

வங்கதேச அணி வெற்றி (Twitter/ICC)

#BANvZIM | வங்கதேச அணி வீரர் முஷ்பிகுர் 2-வது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்தார். ஜிம்பாப்வே அணி வீரர் டெய்லர் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 218 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 1-1 என தொடரை சமன் செய்தது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதலில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வங்தேசம் வென்றது. இதனை அடுத்து, நடைபெற்ற முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

விக்கெட்டை வீழ்த்திய கொண்டாட்டத்தில் வங்கதேச வீரர் (Twitter/ICC)


இந்நிலையில், டாக்காவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமின் இரட்டை சதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே, பிரெண்டன் டெய்லர் (110), மூர் (83) ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் 304 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

வெற்றிக்களிப்பில் வங்கதேச அணி (Twitter/ICC)


218 ரன்கள் முன்னிலைப் பெற்ற வங்கதேசம், ‘ஃபாலோ-ஆன்’ கொடுக்காமல் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் மெஹ்முதுல்லா (101 நாட்அவுட்) சதத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.



443 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. ஒருபுறம் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய, மறுபுறம் நிதானமாக விளையாடிய பிரெண்டன் டெய்லர் (106) சதமடித்து கடைசி வரை போராடினார். இருப்பினும், 5-ம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் 218 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மெஹீடி ஹசன் 5 விக்கெட்டுக்களை சாய்த்தார். இதன்மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என டிராவில் முடிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesan L
First published: