6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் விளையாடும் தாங்கள் மட்டும் அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கப்படுவது ஏன் என ஆதங்கப்படுகிறார் சச்சின் சிவா.

6 ஆண்டுகளாக தமிழக மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டன் 'சச்சின்' சிவா... வருமானத்திற்கு வழியில்லாமல் தவிக்கும் அவலநிலை
சச்சின் சிவா
  • Share this:
மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக விளையாடிவரும் மதுரையைச் சேர்ந்த வீரர், வீட்டில் வருமானத்திற்கு வழியில்லாமல் தவித்து வருகிறார்.

மதுரை மாவட்டம், தெப்பக்குளம், மருது பாண்டியர் நகரில் வசித்து வருபவர் சிவா. பிறந்த 6 மாதத்திலேயே போலியோவால் கால் பாதிக்கப்பட்ட இவரால் சரியாக நடக்க முடியாமல் போனது. சிறு வயதில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் போது அவர்களால் புறக்கணிக்கப்பட்டார் சிவா.

விடாப்பிடியாக கிரிக்கெட் மட்டையை தூக்கிக் கொண்டு அவர்களுடனேயே சுற்றியுள்ளார். இவரது ஆர்வத்தைக் கண்ட நண்பர்கள் விளையாட வாய்ப்பு தர பவுண்டரி, சிக்சருமாக விளாசியுள்ளார். அன்று முதல் சிவாவை அவரது நண்பர்கள் 'சச்சின்' சிவா என அழைக்கத் தொடங்க இன்று அதுவே அவரது அடையாளமாக உள்ளது.


பள்ளி, கல்லூரி என தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்த சச்சின் சிவாவிற்கு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் பற்றி 2013-ல் தெரியவந்தது. இதனையடுத்து தனது சொந்த முயற்சியால் தமிழக அணியில் இடம்பிடித்த சிவா, குறுகிய காலத்திலேயே தமிழக அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றார்.

ஒரு பக்கம் வெற்றிக்கோப்பைகள் இவரது வீட்டில் குவியத் தொடங்கினாலும், கிரிக்கெட் மூலமாக ஒரு ரூபாய் கூட வருவாய் கிடைக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் தமிழக வீரர்கள் கோடியில் சம்பாதிக்கும் போது, அவர்கள் அணியும் அதே உடையணிந்து மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் விளையாடும் தாங்கள் மட்டும் அனைத்து தரப்பினராலும் புறக்கணிக்கப்படுவது ஏன் என ஆதங்கப்படுகிறார் சச்சின் சிவா.

மாற்றுத்திறனாளியான மகன் கிரிக்கெட்டில் செய்யும் சாதனைகளை நினைத்து பெற்றோராக பெருமை கொண்டாலும், வருமானம் இல்லாமல் மகன் படும் கஷ்டங்களை பார்க்க முடியவில்லை என்கிறார் 'சச்சின்' சிவாவின் தாயார். அரசு வேலை ஒன்றே தங்களது வறுமையை போக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.விடா முயற்சி மூலம் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்டில் பல சாதனைகள் செய்து வரும் சச்சின் சிவாவின் குடும்பம் வறுமையின் பிடியில் இருந்து விடுபட அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.

 
First published: December 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading