• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஆஷ்டன் டர்னரைப் போல் தேர்தலில் அடிக்க வேண்டும்: தொண்டர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

ஆஷ்டன் டர்னரைப் போல் தேர்தலில் அடிக்க வேண்டும்: தொண்டர்களுக்கு அமைச்சர் அறிவுரை!

எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆஷ்டன் டர்னர்.

எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆஷ்டன் டர்னர்.

Tamilnadu Minister #SPVelumani Advice To #AIADMK Cadres | தமிழக அமைச்சரின் இந்த ட்வீட்டுக்கு கட்சித் தொண்டர்கள் பதிலளித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மக்களவைத் தேர்தலில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆஷ்டன் டர்னரைப் போல் சுழன்று அடிக்க வேண்டும் என கட்சித் தொண்டர்களுக்கு தமிழக அமைச்சர் வித்தியாசமான அறிவுரை வழங்கியுள்ளார்.

    நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    election commission
    தேர்தல் ஆணையம்.


    தமிழகத்தில் அனைத்து பிரதான கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்துவிட்டு தேர்தல் வேலைகளை முழுவீச்சில் செய்துவருகின்றன. மக்களவை தேர்தலுக்கான 39 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, அதிமுக சார்பில் 1,736 பேர் விருப்ப மனு அளித்தனர். அவர்களுக்கான நேர்காணல் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

    ADMk, அதிமுக
    அதிமுக நேர்காணல்.


    தேர்தலை முன்னிட்டு தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தங்களது கட்சித் தொண்டர்களுக்கு வித்தியாசமான அறிவுரையை வழங்கியுள்ளார்.

    இதுகுறித்து அவரது ட்விட்டரில், “ஒரு ஆஷ்டன் டர்னர் போட்டியின் முடிவை முழுவதுமாக திரும்பிவிட்டார். அவரது விடா முயற்சியை தொண்டர்கள் பிடித்துக்கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.



    தமிழக அமைச்சரின் இந்த ட்வீட்டுக்கு கட்சித் தொண்டர்கள் பதிலளித்து வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மொஹாலியில் நேற்று (மார்ச் 10) நடந்த இந்தியா உடனான 4-வது ஒரு நாள் போட்டியில் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசிய ஆஷ்டன் டர்னர் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    Photos: பத்ம விருதுகள் பெற்ற விளையாட்டு பிரபலங்கள்!

    விளையாடாமலே ட்விட்டர் டிரெண்டிங்கில் இருந்த தோனி!

    VIDEO: நீங்க அடுத்த தோனியா? அழகான ரன் அவுட்டை கோட்டை விட்ட ரிஷப்... கடுப்பான கோலி!

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: