• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Syed Mushtaq Ali Trophy 2021 Final: சையத் முஷ்டாக் அலி டிராபி சாம்பியன் தமிழ்நாடு- கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து ஹீரோவானார் ஷாரூக்கான்

Syed Mushtaq Ali Trophy 2021 Final: சையத் முஷ்டாக் அலி டிராபி சாம்பியன் தமிழ்நாடு- கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து ஹீரோவானார் ஷாரூக்கான்

கடைசி பந்தில் சிக்ஸ் விளாசி ஹீரோவான ஷாரூக்கான், சையத் முஷ்டாக் அலி சாம்பியன் தமிழ்நாடு.

கடைசி பந்தில் சிக்ஸ் விளாசி ஹீரோவான ஷாரூக்கான், சையத் முஷ்டாக் அலி சாம்பியன் தமிழ்நாடு.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி டி20 கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியை தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில்லான போட்டியில் வீழ்த்தியது. கடைசி பந்தில் தமிழ்நாடு அணி வீரர் ஷாரூக்கான் சிக்ஸ் விளாசி த்ரில் வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

  • Share this:
    புதுடெல்லியில் இன்று நடைபெற்ற சையத் முஷ்தாக் அலி டி20 கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் கர்நாடக அணியை தமிழ்நாடு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில்லான போட்டியில் வீழ்த்தியது. கடைசி பந்தில் தமிழ்நாடு அணி வீரர் ஷாரூக்கான் சிக்ஸ் விளாசி த்ரில் வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

    இந்தவெற்றி மூலம் தமிழ்நாடு அணி சையத் முஷ்டாக் அலி கோப்பையை 3வது முறையாக வென்றது. டாஸ் வென்ற தமிழ்நாடு கேப்டன் விஜய் சங்கர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், மணீஷ் பாண்டே தலைமை கர்நாடக அணி முதலில் பேட் செய்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய தமிழ்நாடு அணி கடைசி பந்தில் அடித்த சிக்ஸ் மூலம் 153/6 என்று வெற்றி பெற்றது.

    ஷாரூக்கான் ஹீரோ:

    20-வது ஓவரில் வெற்றிபெற 16 ரன்கள் தேவைப்பட்டது. ஷாரூக்கான் ஏற்கெனவே 12 பந்தில் 24 என்று அபாரமாக ஆடியிருந்தார். கடைசி ஓவரை கர்நாடகா பவுலர் பிரதீக் ஜெயின் வீசினார், இவர் 3 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். ஆனால் கடைசி ஓவரில் முதல் பந்தை வீச சாய் கிஷோர் பவுண்டரி விளாசினார். பிறகு வைடு ஒன்று சாய் கிஷோர், சிங்கிள், ஷாரூக்கான் சிங்கிள் என்று சிங்கிளாக வந்தது, இரண்டு வைடுகளையும் ஜெயின் வீசினார், 5வது பந்தில் 2 ரன்களை ஷாரூக்கான் எடுத்தார், கடைசி பந்தில் 4 எடுத்தால் டை, சிக்ஸ் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஷாரூக்கான் ஸ்கொயர் லெக்கில் பெரிய சிக்சை அடித்து ஹீரோவானார்.

    ஷாரூக்கானை பாராட்டும் தமிழக வீரர்கள்.


    தமிழ்நாடு அணி 3வது முறையாக சையத் முஷ்டாக் அலி கோப்பையை வென்றது. இதோடு தங்கள் கோப்பையையும் தக்கவைத்தது, கடந்த முறையும் தமிழ்நாடுதானே சாம்பியன்.

    முன்னதாக கர்நாடகா அணி பேட் செய்த போது சாய்கிஷோர் அருமையாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதுவும் 4 ஒவர் 12 ரன் 3விக்கெட். ரோகன் காதம் டக் அவுட் ஆனார், மணீஷ் பாண்டே 13 ரன்களில் பவுல்டு ஆனார். சாய் கிஷோர் இருவரையும் பவுல்டு ஆக்கி வெளியேற்றினார்.

    கருண் நாயர், 18, பி.ஆர்.ஷரத் 16 ஆகியோர் ஏமாற்றமளிக்க அபினவ் மனோகர் 37 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 46 ரன்கள் விளாச, பிரவீண் துபே 33 ரன்களை விரைவில் எடுக்க ஜெகதீஷ் சுசித் கடைசியில் இறங்கி ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 7 பந்தில் 18 எடுக்க கர்நாடகா அணி 151/7 என்ற ஸ்கோரை எட்டியது. டி.நடராஜன் ஒரு விக்கெட்டை வீழ்த்த 4 ஓவர்களில் 44 ரன்களைக் கொடுத்தார்.

    தமிழ்நாடு அணி இலக்கை விரட்டும்போது ஹரி நிஷாந்த் 1 பௌண்டரி 2 சிக்சர்களுடன் 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் கொடுத்த கையோடு ரன் அவுட் ஆனார். நாராயண் ஜெகதீசன் 46 பந்துகளில் 41 ரன்களை எடுத்து மந்தமாக ஆடினார். விஜய் சங்கர் (18), நாராஅன் ஜெகதீசன் இருவரையும் ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் கே.சி.கரியப்பா வீழ்த்த 15.2 ஓவர்களில் தமிழ்நாடு 95/4 என்று ஆகி 28 பந்துகளில் 57 ரன்கள் தேவை என்ற பந்துக்கு 2 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது.

    ஷாரூக்கான் இறங்கி 17வது ஓவரில் தர்ஷனை 1 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச அந்த ஓவரில் 19 ரன்கள் வர 17 ஓவர்கள் முடிவில் 116/4 என்று இருந்தது. 18வது ஓவரை ஜெயின் அபாரமாக வீசி 6 ரகளை மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார், ஸ்கோர் 122/5. 19வது ஓவரில் ஷாரூக்கான் ஒரு சிக்ஸ் அடிக்க பை வகையில் ஒரு 4 ரன்கள் கிடைக்க 136/6 என்று இருந்தது, அதாவது 18.5 ஓவர்களில் 130/6 என்று இருந்த போது கடினம்தான், ஆனால் ஷாரூக்கான் ஒரு சிக்ஸ் அடித்து கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 16 ரன்களுக்கு குறைத்தார்.

    பிறகு கடைசி ஓவரில் சாய்கிஷோர் பவுண்டரி அடிக்க பிறகு 2 வைடுகள், சிங்கிள்கள், 2 ரன்கள் என்று வர கடைசி பந்தை ஷாரூக்கன் சிக்ஸ் விளாசி த்ரில் வெற்றிபெறச் செய்தார். ஷாரூக்கான் 15 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 33 நாட் அவுட்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: