ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை 2022 : முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த தமிழர்; யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?

டி20 உலகக்கோப்பை 2022 : முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த தமிழர்; யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?

ஹாட்ரிக் விக்கெட் எடுத்த கார்த்திக் மெய்யப்பன்

ஹாட்ரிக் விக்கெட் எடுத்த கார்த்திக் மெய்யப்பன்

யுஏஇ அணியில் சென்னை பிறந்து துபாயில் குடிபெயர்ந்துள்ள கார்த்திக் மெய்யப்பன் என்பவரும் இடம் பிடித்து இலங்கைக்கு எதிரான டி20 உலககோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustrailaAustrailaAustrailaAustrailaAustraila

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சென்னையை சேர்ந்த கார்த்திக் மெய்யப்பன் சாதனை படைத்துள்ளார்.

  ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலககோப்பை தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக 8 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் சூப்பர் மீதமுள்ள 4 அணிகளுக்கு தகுதி பெறுவதற்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை மற்றும் யுஏஇ அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற யுஏஇ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

  யுஏஇ அணியில் சென்னை பிறந்து துபாயில் குடிபெயர்ந்துள்ள கார்த்திக் மெய்யப்பன் என்பவரும் இடம் பிடித்து இருந்தார். முதலில் பேட் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர் பதும் நிஷாங்கா மட்டும் அதிரடியாக விளையாடி 74 ரன்களை எடுத்தார். தொடர்ந்து இலங்கை அணி சீராக ரன்களை குவித்த  நிலையில் 14வது ஓவரை வீசிய சுழல்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார்.

  4வது பந்தில் ராஜபக்சே விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்ததாக 5வது பந்தில் அசலங்க விக்கெட்டையும்,6வது பந்தில் இலங்கை கேப்டன் சங்காவை கிளீன் போல்ட் ஆக்கி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

  இதையும் படிங்க: மைதானத்தில் பாய்ந்து பறந்து பீல்டிங் செய்த விராட் கோலி! இணையதளம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள விராட் வீடியோஸ்!.

  2000 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் பிறந்த மெய்யப்பன் சென்னை, அபுதாபி மற்றும் துபாயில் வளர்ந்தார். 2012 இல் அவரது குடும்பம் நிரந்தரமாக துபாயில் குடியேறியது. தொடர்ந்து கிரிக்கெட்டின் மீதான ஆர்வத்தால் லெக் ஸ்பின் பவுலராக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் இடம் பிடித்தார்.

  2020ஆம் ஆண்டு 19வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான யுஏஇ அணியில் அவர் இடம் பெற்றார். அதே வருடத்தில் டிசம்பர் 2020 இல், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் ஒரு வருட கால பகுதி நேர ஒப்பந்தம் பெற்ற பத்து கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவானர்.

  இதனையடுத்து 8 அக்டோபர் 2021 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக அயர்லாந்திற்கு எதிராக தனது டி20 ஐ அறிமுகமானார். தொடர்ந்து தனது சுழல்பந்து வீச்சு திறமையால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 தொடருக்கு தேர்வாகி தற்போது ஹாட்ரிக் விக்கெட் எடுத்து கிரிக்கெட் உலகிற்கு தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.

  கார்த்தி மெய்யப்பன் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தாலும் இந்த போட்டியில் யுஏஇ அணி இலங்கையிடம் தோல்வியடைந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 152 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய யுஏஇ அணி 73 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை சந்தித்தது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: T20 World Cup, UAE