அகமதாபாத் பிட்ச் சென்னை பிட்ச் போல்தான் இருக்கும்: இங்கிலாந்துக்கு பீதியைக் கிளப்பும் ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

கிரிக்கெட்டைப் பற்றி பேசுவோம், பிட்ச்களை அல்ல, என்றார் ரோஹித் சர்மா.

 • Share this:
  பிப்ரவரி 24ம் தேதி இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் தொடங்கும் 3வது டெஸ்ட் பிட்சுக்கும், சென்னை டெஸ்ட் பிட்சுக்கும் அதிக வித்தியாசமில்லை என்று இங்கிலாந்து அணியின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் சர்மா.

  டெஸ்ட் தொடர் இதுவரை 1-1 என்று டிரா ஆகியுள்ளது. இந்தத் தொடரை இந்தியா வென்றால்தான் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறும்.

  அதனால் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குண்டு குழிப்பிட்ச்களைப் போட்டுத்தள்ளி வருகின்றனர். ஐசிசி போன்ற கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்புகள் உட்பட கேள்வி கேட்பாரில்லாமல் பிசிசிஐ தனது பண பலத்தைக் காட்டி தன் இஷ்டத்துக்கு காட்டாட்சி தர்பார் நடத்தி வருகிறது.

  கேட்டால் அங்கு போனால் கிரீன் டாப் போடுகின்றனரே என்றால் நாம் அங்கு போய் வெற்றி பெற முடியுமே, ஆனால் அவர்கள் ஒரு போட்டியில் இங்கு வெற்றி பெற்றால் கூட உடனே ஆட முடியாத குழிப்பிட்சைப் போட்டு ஜெயித்து விட்டு தாடிக்குள் சிரிக்கிறார் விராட் கோலி. இதெல்லாம் ஒரு வெற்றி என்று கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்!

  இந்நிலையில் அதே ரசிக மனோபாவத்தில்தான் உயர்தர, சர்வதேச தர வீரரான ரோஹித் சர்மாவும் கூறுகிறார்:

  இப்போதே பிட்ச் பற்றி பேச முடியாது என்றாலும் சென்னையில் 2வது டெஸ்ட் பிட்சுக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை என்றே என்னால் சொல்ல முடியும்.

  இந்தப் பிட்சிலும் பந்துகள் திரும்பவே செய்யும். ஆட்டம் தொடங்கும் அன்று பிட்ச் எப்படி இருக்கும் என்று மதிப்பீடு செய்வோம். அகமாதாபாதில் சர்வதேச போட்டி ஆடி நீண்ட காலம் ஆகிவிட்டது. எனவே அது எப்படி நடந்து கொள்ளும் என்று கூறுவது கடினம்.

  எந்த ஒரு அணியும் தங்களுக்குச் சாதகமான பிட்ச்களில் விளையாடவே விரும்பும். இதுதான் உள்நாட்டு சாதகம் என்பது இது கூடாது என்றால் எந்த நாட்டுக்கும் அதை அனுமதிக்கக் கூடாது.

  இந்தியா மட்டுமல்ல எல்லா இடங்களிலும் ஒரே ரக பிட்சை ஐசிசி உருவாக்க வேண்டியதுதான். நாங்கள் வெளிநாடுகளில் ஆடும்போது அவர்களும்தான் எங்களுக்குக் கடினமான பிட்சை உருவாக்குகிறார்கள்.

  பிட்சை பற்றி நாம் விவாதிக்கக் கூடாது மாறாக கிரிக்கெட் ஆட்டம், வீரர்கள் அவர்களது உத்தி பற்றியே பேச வேண்டும். நாங்கள் வெளிநாடுகளில் ஆடும்போது பிட்ச்கள் பற்றி நாங்கள் பேசுவதில்லை. டெஸ்ட் எப்படி முடிகிறதோ அதை ஏற்றுக் கொண்டு நகர்கிறோம். இப்படித்தான் எல்லோருமே செய்ய வேண்டும். குறிப்பாக நிபுணர்கள் இப்படித்தான் சிந்திக்க வேண்டும்.

  கிரிக்கெட்டைப் பற்றி பேசுவோம், பிட்ச்களை அல்ல, என்றார் ரோஹித் சர்மா.
  Published by:Muthukumar
  First published: