Home /News /sports /

விக்கெட் எடுத்ததை மேஜிக் செய்து கொண்டாடிய பவுலர்...! - வீடியோ

விக்கெட் எடுத்ததை மேஜிக் செய்து கொண்டாடிய பவுலர்...! - வீடியோ

தப்ரைஸ் ஷாம்சி

தப்ரைஸ் ஷாம்சி

  • News18
  • Last Updated :
    ஸான்சி சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் கேப்டவுன் பிளிட்ஸ் - பார்ல் ராக்ஸ் அணிகள் மோதிய போட்டியில், ராக்ஸ் அணியின் வீரர் தப்ரைஸ் ஷாம்சி விக்கெட் எடுத்ததை வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.

    தென்னாப்பிரிக்காவில் ஸான்சி சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. கேப்டவுன் பிளிட்ஸ் - பார்ல் ராக்ஸ் அணிகள் மோதிய போட்டியில் சுவாரஸ்யமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஆட்டத்தின் போது கேப்டவுன் பிளிட்ஸ் அணி பேட்டிங் செய்த நிலையில், பார்ல் ராக்ஸ் அணி வீரர் தப்ரைஸ் ஷாம்சி விக்கெட் வீழ்த்தினார்.





    அப்போது, கொண்டாடத்தில் ஈடுபட்ட அவர் தனது பையில் இருந்து கர்சீப் போன்ற துணியை எடுத்து காற்றில் உதற, அது கம்பு போல மாறியது. இதனால், ரசிகர்கள் உள்பட பலரும் ஆச்சரியமடைந்தனர். போட்டியின் இறூதியில், ராக்ஸ் அணி கேப்டவுன் பிளிட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.



    ஏற்கனவே, கடந்த போட்டியின் போது தப்ரைஸ் ஷாம்சி, விக்கெட் எடுத்த பின்னர், கால் ஷூவைக் கழற்றி மனைவிக்கு போன் செய்வது போல பாவனை செய்தார். மேலும், மைதானத்தில் இருந்த தனது மனைவிக்கு அவர் பறக்கும் முத்தங்களையும் கொடுத்தார்.

     
    Published by:Sankar
    First published:

    அடுத்த செய்தி