• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர் 4 பந்தில் 4 விக்கெட், ஹாட்ரிக் சாதனை!

டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர் 4 பந்தில் 4 விக்கெட், ஹாட்ரிக் சாதனை!

நெதர்லாந்துக்கு எதிராக 4 பந்தில் 4 விக்கெட் ஹாட்ரிக் சாதனை படைத்த கர்ட்டிஸ் கேம்பர்.

நெதர்லாந்துக்கு எதிராக 4 பந்தில் 4 விக்கெட் ஹாட்ரிக் சாதனை படைத்த கர்ட்டிஸ் கேம்பர்.

  • Share this:
    ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பையில் தகுதிச்சுற்று பிரிவு ஏபோட்டியில் இன்று அயர்லாந்தும், நெதர்லாந்தும் ஆடிவருகின்றன, இதில் சற்றுமுன் அயர்லாந்து வீச்சாளர் கர்டிஸ் கேம்ஃபர் ஹாட்ரிக் சாதனையோடு 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசாத்திய சாதனை புரிந்தார்.

    அயர்லாந்துக்காக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் முதல் ஹாட்ரிக் கைப்பற்றிய வீரர் ஆனார் இந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் கர்டிஸ் கேம்ஃபர். ஆடவர் டி20 சர்வதேசப் போட்டிகளில் ரஷீத் கான் அயர்லாந்துக்கு எதிராக 2019-ல் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.

    லசித் மலிங்கா 2019-ல் நியூசிலாந்துக்கு எதிராக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப்போது கர்டிஸ் கேம்ஃபர் 4 விக்கெட்டுகளை வரிசையாகக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.

    ஆட்டத்தின் 10வது ஓவரை வீச வந்த கேம்ஃபர் நெதர்லாந்தின் ஆக்கர்மேன் என்பவரை 11 ரன்களில் கேட்சில் வீழ்த்தினார். அடுத்த பந்தில் ரியான் டஸ்சதேவை எல்.பி.செய்தார். அடுத்த பந்தே எட்வர்ட்ஸ் என்பவரையும் எல்.பி.யில் வெளியேற்றினார் கர்டிஸ் கேம்பர். இது ஹாட்ரிக் சாதனையாகக் கொண்டாடப்பட்ட வேளையில் அடுத்து இறங்கிய வான் டெர் மெர்வ் வெளியே சென்ற பந்தை பெரிய டிரைவ் ஆடப்போய் மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பவுல்டு ஆனார்.

    ஆகவே 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள். அசாத்திய சாதனையை டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் சாதித்தார் கர்டிஸ் கேம்பர்.

    நெதர்லாந்து அணி தற்போது 74 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது. இன்னும் 14 ஓவர்கள் மீதமுள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: