ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலக கோப்பையின் லீக் போட்டி இன்றுடன் நிறைவு : அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி?

டி20 உலக கோப்பையின் லீக் போட்டி இன்றுடன் நிறைவு : அரையிறுதிக்கு முன்னேறுமா இந்திய அணி?

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய அணி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ இல்லை மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலோ இந்தியா அரை இறுதிக்கு முன்னேறும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • intern, IndiaMelbourneMelbourneMelbourne

  டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று ஜிம்பாப்வே அணியுடன் போட்டியிடுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி ஆட்டத்திற்கு இந்திய அணி தேர்ச்சி பெறும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 பிரிவில் 12 அணிகள் 2 பிரிவுகளாக மோதி வருகின்றன. இதில் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இந்நிலையில் குரூப் 2 பிரிவில் அரை இறுதியில் போட்டியிடும் அணிகளை நிர்ணயிக்கும் போட்டி இன்று நடைபெறுகிறது.

  மெல்போர்னில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் இந்திய அணியும் ஜிம்பாப்வே அணியும் மோதுகின்றன. இந்திய அணி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ இல்லை மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலோ இந்தியா அரை இறுதிக்கு முன்னேறும்.

  இதையும் வாசிக்க: ஜிம்பாவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழை பெய்தால் என்னவாகும்? இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பாதிக்குமா? (news18.com)

  மெல்போர்னில் மழை பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மழையால் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளது. இந்த போட்டி இந்திய நேரப்படி 1:30 மணிக்கு தொடங்கும்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Indian cricket team, T20 World Cup