• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs Pak T20 Worldcup ரோகித் சர்மாவுடன் கோலி ஓப்பனிங் இறங்குகிறார்?

Ind vs Pak T20 Worldcup ரோகித் சர்மாவுடன் கோலி ஓப்பனிங் இறங்குகிறார்?

விராட் கோலி- இஷான் கிஷன்

விராட் கோலி- இஷான் கிஷன்

  • Share this:
    இந்திய அணியின் காம்பினேஷன் பெரிய அளவில் இன்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ரோகித், கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகிய டாப் 3 ஏறக்குறைய உறுதியாகிவிட்டது, இதனைக் கோலியே அறிவித்துவிட்டார்.

    இன்று அக்.24ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக்கோப்பை போட்டியில் துபாயில் இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன. சப்போஸ் கே.எல்.ராகுல் சரியாக ஆடாவிட்டால் அவருக்குப் பதிலாக அடுத்தடுத்த போட்டிகளில் இஷான் கிஷன் வருவாரா அல்லது அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாதா என்பது பற்றி கிரிக் இன்போ இணையதளப் பேட்டியில் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கவுதம் கம்பீர் கூறும்போது, “கே.எல்.ராகுல், ரோகித் சர்மா தொடக்க வீரர்கள், கோலி 3ம் நிலையில் இறங்குவார். ரோகித், கே.எல்.ராகுல் இருவரில் யார் சொதப்பினாலும் கோலி ஓப்பனிங்கில் வரவேண்டும், இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே நான் கருதுகிறேன்.

    அதே போல் ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் இருக்க வேண்டுமென்றால் அவர் பவுலிங் போட வேண்டும், அவர் பவுலிங் வீசவில்லை என்றால் என்னுடைய லெவனில் அவருக்கு இடம் கிடையாது. அணிச்சேர்க்கை எப்படி இருக்க வேண்டுமெனில் 3 வேகப்பந்து வீச்சு, 2 ஸ்பின் பவுலர்கள் இருக்க வேண்டும். வருண் சக்ரவர்த்தி முதல் சாய்ஸ் ஸ்பின்னர் மற்றும் ரவீந்திர ஜடேஜா.

    பிட்ச் உண்மையில் வறண்டு கிடந்தால் 3வது ஸ்பின்னர் பற்றி யோசிக்கலாம், அப்படி 3வது ஸ்பின்னர் தேவைப்பட்டால் அது லெக் ஸ்பின்னாக இருக்க வேண்டும், ராகுல் சாகர் இருக்க வேண்டும். வேகப்பந்து வீச்சில் பும்ராதான் என் முதல் சாய்ஸ்.

    Also Read: விராட் கோலி முதல் ஷாகின் அப்ரீடி வரை- இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை பிளேயர் டு வாட்ச்

    இவ்வாறு கூறியுள்ளார் கவுதம் கம்பீர்.

    இந்திய அணி (உத்தேச லெவன்): ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா, ஷமி, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாகர்/அஸ்வின்/ஷர்துல் தாக்கூர்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: