• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 Worldcup: நியூசிலாந்தை வீழ்த்தி உங்களைக் காப்பாற்றியுள்ளோம் இந்தியா- சீண்டும் அக்தர்

T20 Worldcup: நியூசிலாந்தை வீழ்த்தி உங்களைக் காப்பாற்றியுள்ளோம் இந்தியா- சீண்டும் அக்தர்

ஷோயப் அக்தர்

ஷோயப் அக்தர்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆடாமல் கடைசி நேரத்தில் ரத்து செய்து நியூசிலாந்துக்கு சென்ற நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயப் அக்தர் கடுமையாகக் கிண்டலடித்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்துக்கும் அடி கொடுத்தது பாகிஸ்தான்.

    இந்திய அணியை நோ-லாசில் வென்ற பாகிஸ்தான் அன்று நியூசிலாந்துக்கு எதிராக 135 ரன்கள் இலக்கை சற்றே போராடி எடுத்து வெற்றி பெற்றது, இதன் மூலம் பாகிஸ்தான் தொடரை புறக்கணித்த நியூசிலாந்தை பழித்தீர்த்தது பாகிஸ்தான் அணி. ஷார்ஜா மைதானம் சிறிய மைதானம், ஹை ஸ்கோரிங் பிட்சில் மீண்டும் பாகிஸ்தானின் அட்டகாசமான பவுலிங்கில் நியூசிலாந்து மண்ணைக் கவ்வியது.

    அன்று பாகிஸ்தான் ஜெயிக்க இந்திய ரசிகர்களே பிரார்த்தனை செய்தனர், காரணம் இந்திய அணி அரையிறுதியில் நுழைய பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து தோற்க வேண்டிய தேவை இருந்தது, இது பற்றியும் ஷோயப் அக்தர் செம கிண்டலடித்துள்ளார்.

    ஷோயப் அக்தர் இது தொடர்பாகக் கூறும்போது, “நியூசிலாந்துக்கு வாழ்த்துக்கள். பாகிஸ்தானில் ஆடாமல் புறக்கணித்தீர்கள் இங்கு யுஏஇ-யில் சேஃப் ஆக இருக்கிறீர்களா? மைதானத்தில் கூட உங்கள் பாதுகாப்புக்காக பாதுகாப்பு படையினரை அனுப்பியிருப்போம் பாவம், ஆனால் மறந்து போய் விட்டோம். ஏனென்றால் மைதானத்தில் கூட நீங்கள் பாதுகாப்பாக உணர்ந்திருக்க மாட்டீர்கள் அல்லவா?

    ஒரு மாறுதலுக்காக இந்தியாவே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்தனர். ஏனெனில் நியூசிலாந்துக்கு எதிராக நாங்கள் தோற்றிருந்தால், நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி விட்டால் அது இந்திய அணிக்கு பெரிய சிக்கல்தான். எனவே நாங்கள் உங்களைக் காப்பாற்றியிருக்கிறோம் இந்தியா.

    நாங்கள் இந்தியா இறுதிப் போட்டிக்கு வருவதை விரும்புகிறோம். இறுதிப் போட்டியிலும் உங்களை (இந்தியா) சந்திக்க தயாராக இருக்கிறோம்” என்றார் அக்தர்.

    பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தானை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பையில் ஒரு எக்ஸ் பாக்டராக உள்ளது. இந்த அணி நியூசிலாந்தையும் வெல்லலாம், பாகிஸ்தானையும் வெல்லலாம், வாய்ப்பிருக்கிறது.

    இந்திய அணியும் ஆப்கானுக்கு எதிராக எச்சரிக்கையுடன் ஆட வேண்டியுள்ளது, ஏனெனில் அந்த அணி அச்சமற்ற கிரிக்கெட்டை வெளிப்படுத்துகிறது, பாகிஸ்தான் அணி தோற்றால் அது ஆப்கானுடனாகத்தான் இருக்க முடியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: