• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 Worldcup 2021: ஷாகிப் அல் ஹசன் ஆல்ரவுண்ட் அதிரடி: சூப்பர்-12 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி

T20 Worldcup 2021: ஷாகிப் அல் ஹசன் ஆல்ரவுண்ட் அதிரடி: சூப்பர்-12 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்ற வங்கதேசம்

டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்ற வங்கதேசம்

ஸ்காட்லாந்துக்கு எதிராக உலகக்கோப்பை டி20 பிரிவு பி தகுதிச் சுற்றுப்போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த வங்கதேசம் இன்று பபுவா நியுகினியா அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து டி20 உலகக்கோப்பை 2021-ன் பிரதான சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது.

  • Share this:
    ஸ்காட்லாந்துக்கு எதிராக உலகக்கோப்பை டி20 பிரிவு பி தகுதிச் சுற்றுப்போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்த வங்கதேசம் இன்று பபுவா நியுகினியா அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து டி20 உலகக்கோப்பை 2021-ன் பிரதான சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்று விட்டது.

    டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மகமுதுல்லா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனையடுத்து தொடக்கத்தில் சடுதியில் முதல் விக்கெட்டை இழந்த வங்கதேசம் பிறகு லிட்டன் தாஸ் (29), ஷாகிப் அல் ஹசன் (46) கேப்டன் மகமுதுல்லா 28 பந்துகளில் 50 ரன்கள் விளாசல் மூலம் 20 ஓவர்களில் 181/7 என்று பெரிய இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய பபுவா நியுகினியா அணி 29/7 என்று மடிந்து பிறகு 97 ரன்களுக்குச் சுருண்டது, இந்த அணியில் விக்கெட் கீப்பர் கிப்லிங் டோரிகா 34 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சர்கள் விளாசி 46 ரன்கள் எடுக்க சாத் சோப்பர் 11 ரன்கள் எடுக்க இவர்கள் இருவர் மட்டுமே இரட்டை இலக்கை எட்ட 19.3 ஓவர்களில் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி வெளியேறியது.

    மீண்டும் ஷாகிப் அல் ஹசன் ஆல்ரவுண்டு திறமை காட்டி பேட்டிங்கில் நல்ல அடித்தளம் அமைத்ததோடு பவுலிங்கில் 4 ஓவர் 9 ரன்கள் 4 விக்கெட் என்று ஆல்ரவுண்ட் அதிரடி காட்டி வங்கதேச அணியை பிரதான சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பெரிய வெற்றி என்பதால் நெட் ரன் ரேட் இவர்களுக்கு 1.733 என்று கிடைக்க பிரிவு பியில் டாப் இடத்தைப் பிடித்து தகுதி பெற்றது.

    இதனால் இப்போது நடைபெறும் ஓமான் - ஸ்காட்லாந்து போட்டி ஒரு நாக் அவுட் போட்டியாகிவிட்டது. பங்களாதேஷிற்கு பவர் ப்ளேயில் பெரிய ரன்கள் தேவைப்பட்டது, அதை லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன் பூர்த்தி செய்தனர், லிட்டன் தாஸ், ஸ்கொயர் லெக்கில் சிக்ஸ் அடித்து ஆரம்பிக்க ஷகிப் அல் ஹசன் வேகப்பந்து வீச்சாளர் ரவுவை நேராக பெரிய சிக்சரி அடித்து அந்த ஓவரை பெரிய ஓவராக்கி விட்டார். 6 ஓவர்களில் 45/1 என்று இருந்தது வங்கதேசம். ஷாகிப் அல் ஹசன் 37 பந்துகளில் 46 ரன்கள் வெளுத்ததில் 3 சிக்சர்கள் விளாசினார். ஆனால் லாங் ஆனில் சார்லஸ் ஆமினியின் அபாரமான டைவிங் கேட்சுக்கு வெளியேறினார்.

    இப்போது ஓமான், ஸ்காட்லாந்து அணிகள் ஆடிவருகின்றன .இதில் ஒமான் அணி நெட் ரன் ரேட்டில் பிரமாதமாக உள்ளது, எனவே இந்த அணி வென்றால் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் அதே நிலைதான் ஸ்காட்லாந்து அணிக்கும் வென்றால் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: