• HOME
 • »
 • NEWS
 • »
 • sports
 • »
 • T20 World Cup 2021: இன்று பாகிஸ்தானிடம் நியூசிலாந்து தோற்றால் இந்தியாவுக்கு நல்லது

T20 World Cup 2021: இன்று பாகிஸ்தானிடம் நியூசிலாந்து தோற்றால் இந்தியாவுக்கு நல்லது

பாகிஸ்தான் வீரர்கள். இன்று நியூசிலாந்துடன் மோதல் டி20 உலகக்கோப்பை, ஷார்ஜா

பாகிஸ்தான் வீரர்கள். இன்று நியூசிலாந்துடன் மோதல் டி20 உலகக்கோப்பை, ஷார்ஜா

 • Share this:
  பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அன்று இந்தியாவை வீழ்த்தியவுடனேயே உலகக்கோப்பையையே வென்ற மகிழ்ச்சிதான், ஆனால் அன்று படைத்த வரலாறு இனி வரலாறு மட்டுமே அடுத்தடுத்து நகர்ந்து செல்ல வேண்டும், இந்தியாவை வீழ்த்துவதை விட பாகிஸ்தான் தொடரை பாதியிலேயே ரத்து செய்து விட்டு ஓடிப்போன நியூசிலாந்து அணியை பழித்தீர்க்க இன்று பாகிஸ்தானுக்கு நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது.

  இன்றைய போட்டியில் பாகிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தி விட்டால் இந்தியா-நியூசிலாந்து போட்டி ஏறக்குறைய ஒரு முன்கூட்டிய நாக்-அவுட் போட்டி போன்றதுதான், ஏனெனில் மீதமிருக்கும் 3 அசோசியேட் அணிகளை அனைவருமே வெல்வார்கள், அப்படியிருக்க இந்தியா நியூசிலாந்திடம் தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியதுதான். அதற்கு இன்று பாகிஸ்தான் வெற்றி பெறுவதுதான் இந்தியாவுக்கு நல்லது. ஏனெனில் இதில் நியூசிலாந்து வெற்றி பெற்று விட்டால் இந்தியாவுக்கும் நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையே குவாலிஃபையிங்கில் ரன் விகிதம் ஆதிக்கம் செலுத்தும் அது நல்லதல்ல.

  இன்று நியூசிலாந்து தோற்றால், பாகிஸ்தான் 2 வெற்றிகளுடன் மீதமுள்ள 3 அணிகளை வீழ்த்தி எளிதில் தகுதி பெற்று விட்டால், இந்தியாவுக்கு நியூசிலாந்துடன் மட்டும்தான் போட்டியிருக்கும். மற்ற அணிகளை இந்தியாவும் வீழ்த்தும், நியூசிலாந்தும் வீழ்த்தும். அதற்கு நாம் நியூசிலாந்தை வீழ்த்திவிட்டால் தகுதி பெற்று விடலாம், நியூசிலாந்து இன்று தோற்றால் இந்திய அணிக்கு நல்லது, மாறாக நியூசிலாந்து இன்று வெற்றி பெற்று விட்டால் இந்தியாவுக்கு சிக்கல் அதிகரிக்கும். ஆனால் இந்தக் கணக்கீடுகளெல்லாம் ஆப்கானிஸ்தான் என்ன செய்யும் என்று தெரியாததனால் விளைவதே, இடையில் ஆப்கான் ஏதாவது பெரிய அதிர்ச்சிகளை அளித்தால் ஒட்டுமொத்த சீனும் மாறிவிடும்.

  எப்போதுமே வரலாற்று ரீதியாக இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி பெறுகிறது என்றால் அவர்களின் ஸ்பிரிட் உச்சத்தில் இருக்கும். இதை புள்ளி விவரங்களுடன் நிரூபிக்க முடியும். அதே போல்தான் இன்றும் நியூசிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் ஃபுல் துடிப்புடன் இறங்குவார்கள். ஒரு பழைய பாகிஸ்தான் ஆக்ரோஷத்தை அன்று பார்த்தோம், இன்றும் அது நியூசிலாந்துக்கு எதிராக நிச்சயம் தொடரவே செய்யும்.

  இந்தப் போட்டி ஷார்ஜாவில் நடைபெறுகிறது, ஷார்ஜா எப்போதும் பாகிஸ்தானுக்கு உளவியல் ரீதியாக சாதகமான மைதானமே. முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் முழு பேட்டிங்கும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாமல் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோரே அடித்து நொறுக்கி விட்டனர், எனவே இன்று இவர்களில் ஒருவர் விரைவில் ஆட்டமிழந்தால், மற்ற பேட்ஸ்மென்களுக்கு இது முதல் போட்டி போன்றதுதான் ஆகவே பகர் ஜமான், முகமது ஹபீஸ், ஷோயப் மாலிக் போன்றோருக்கு கடினப்பாடு இருக்கும்.

  இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 7 பவுலர்களை பயன்படுத்தியது, அதில் மாலிக் இல்லை. ஷாகின் ஷா அப்ரீடி இந்தியாவுக்கு எதிராக பரபரப்புத் தொடக்கம் கொடுத்தார், எனவே நியூசிலாந்து தொடக்க வீரர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஹாரிஸ் ராவுஃப் என்ற வேகப்பந்து வீச்சாளர் 145-150 கிமீ வேகம் வீசுகிறார். இவரை முடிவு ஓவர்களில் அடிப்பது கடினம்.

  நியூசிலாந்து அணி மாறாக தங்கள் வார்ம் அப் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்திடம் உதை வாங்கி இன்று பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மேலும் கேன் வில்லியம்சன் காயம் சீரியசானால் அவரால் ஆட முடியாது போகும் இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடும். ஆனால் நியூசிலாந்து பந்து வீச்சு உலகத்தரம் வாய்ந்தது.

  ஷார்ஜா பிட்ச் வங்கதேசம்-இலங்கை போட்டியில் இருந்தது போல் பேட்டிங் பாரடைஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

  நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன், டாட் ஆஸ்ட்ல், ட்ரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, லாக்கி பெர்கூசன், மார்டின் கப்டில், கைலி ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், டிம் செய்ஃபர்ட், இஷ் சோதி, டிம் சவுதி.

  பாகிஸ்தான் அணி: பாபர் அசாம், ரிஸ்வான், பகர் ஜமான், ஹபீஸ், ஷோயப் மாலிக், ஹசன் அலி, ஹாரிஸ் ராவுஃப், ஷாகீன் அப்ரீடி, இமாத் வாசிம், ஷதாப் கான், நவாஸ், ஆசிப் அலி, ஹைதர் அலி, சர்பராஸ் அகமெட், முகமது வாசிம், ஷோயப் மக்சூது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: