முகப்பு /செய்தி /விளையாட்டு / ஏதோ பேசணுமேன்னு பேசாதீங்க, நல்லா பேசுங்க, விவரமா பேசுங்க- சேவாக், கம்பீருக்கு பாகிஸ்தான் வீரர் அட்வைஸ்

ஏதோ பேசணுமேன்னு பேசாதீங்க, நல்லா பேசுங்க, விவரமா பேசுங்க- சேவாக், கம்பீருக்கு பாகிஸ்தான் வீரர் அட்வைஸ்

சேவாக் கம்பீரை விமர்சித்த சல்மான் பட்.

சேவாக் கம்பீரை விமர்சித்த சல்மான் பட்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

டி20 உலகக்கோப்பை முதல் போட்டியில் இந்திய அணியை எந்த ஒரு சவாலுமின்றி எளிதாக வீழ்த்திய பாகிஸ்தான் அணி மற்றும் அது குறித்த கொண்டாட்டங்கள் குறித்து இந்திய முன்னாள் வீரர்கள், சேவாக் மற்றும் கம்பீர் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கண்டித்துள்ளார்.

பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடுபவர்கள், பட்டாசு வெடித்து கொண்டாடுபவர்கள் இந்தியர்கள் அல்ல, நம் அணியுடன் கரம்கோர்ப்போம் என்று கம்பீர் தெரிவிக்க, சேவாக், இப்போது பட்டாசு வெடிக்க முடிகிறது என்றால் தீபாவளிக்கு ஏன் வெடிக்கக் கூடாது என்று கேட்டு ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் தன் யூடியூப் சேனலில் சல்மான் பட் கூறும்போது, “சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இப்படியா ரியாக்ட் செய்வது? கம்பீர், சேவாக் இருவரும் நீண்ட காலம் ஆடியவர்கள், மிகவும் பிரபலமானவர்கள் கூட. இவர்களைப் போன்றவர்கள்தான் மக்களுக்கு எடுத்துச் சொல்லை புரிந்து கொள்ள வைக்க வேண்டும். இவர்களே இப்படி கருத்துக் கூறினால் இவர்களைச் சுற்றியிருப்பவர்களும் இவர்கள் கூறுவதுதான் சரி என்று நினைப்பார்கள்.

கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் என்ன எழுதுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இவர்கள் கூறுவதை வேதவாக்காக எடுத்துக் கொள்கின்றனர். எனவே இவர்கள்தான் சரியான கருத்தைச் சொல்ல வேண்டும், விவரமாகப் பேச வேண்டும். மனதில் தோன்றியதையெல்லாம் கருத்து என்ற பெயரில் வெளியிடக்கூடாது. அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கும் விதமாக பேச வேண்டும்.

சேவாகும் கம்பீரும் அவர்களுக்குப் பொருத்தமற்ற விதத்தில் பேசுவது கூடாது. இந்தியா பாகிஸ்தானுக்கு 2004 தொடருக்காக வந்த போது கடைசி போட்டியில் பட்டாசு வெடிக்க நாங்களே ஏற்பாடு செய்தோம். தொடர் அதுவரை 2-2 என்று சமன் ஆகியிருந்தது, இந்தியா தொடரை வென்றது அப்போது வெடி வெடித்தோம். இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். இதுதான் ஸ்போர்ட்ஸ்மென் ஸ்பிரிட்” என்றார்.

பாகிஸ்தான் உடன் தோற்றதில் இந்திய வீரர் முகமது ஷமி மீது ஆன்லைன் அவதூறுகள் வெகுவாகக் கிளம்பின, இதனை சேவாக், கம்பீர், சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன், இர்பான் பதான் ஆகியோர் கடுமையாகக் கண்டித்தனர்.

First published:

Tags: Gautam Gambhir, India vs Pakistan, T20 World Cup, Virender sehwag