• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • WI vs BAN | வங்கதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றி

WI vs BAN | வங்கதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றி

WI vs BAN

WI vs BAN

T20 World Cup | டி20 உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி ஓவரில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 பிரிவில் குரூப் 1 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி - வங்கதேசம் அணிகள் மோதின. சார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்எடுக்க முடியாமல் அவுட்டாகி வெளியேறினர். கெயல், லூயிஸ், ஹெட்மெயர், ரஷல், பிராவோ உள்ளிட்டோர் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகினர். நிக்லோஸ் பூரண் மட்டும் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தால். இதனால் மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

    143 ரன்கள் எடுத்ததால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஷகிப் அல் ஹசன் 9 ரன்களில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரர் முகமது நயிம் 17 ரன்களில் அவுட்டாக வங்கதேச அணி ரன்சேர்க்க தடுமாறியது.

    வங்கதேச அணியின் விக்கெட்டை சீரான இடைவெளியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர். இதனால் அந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட கடைசி ஓவரில் வங்கதேச அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கடைசி ஓவரை ரஷல் வீசினார். கடைசி பந்து வரை விறுவிறப்பாக சென்ற இந்த போட்யில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: