• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup Warm Up: வார்னரின் தொடரும் ‘டக்’ பயணம்; இரு அணிகளிலும் அரைசதம் இல்லை- ஆஸி. வெற்றி

T20 World Cup Warm Up: வார்னரின் தொடரும் ‘டக்’ பயணம்; இரு அணிகளிலும் அரைசதம் இல்லை- ஆஸி. வெற்றி

டேவிட் வார்னர்.

டேவிட் வார்னர்.

அபுதாபி, டாலரன்ஸ் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை ஆஸ்திரேலியா போராடி ஒரு பந்து மீதமிருக்கையில் ஜெயித்தது.

  • Share this:
    முதலில் பேட் செய்த வில்லியம்சன் தலைமை நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 19.5 ஓவர்களில் 159/7 என்று வெற்றி பெற்றது. இரு அணிகளிலும் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அதிகபட்ச ஸ்கோரே இரு அணிகளுக்கும் சேர்த்து கேப்டன் கேன் வில்லியம்சன் அடித்த 37 ரன்கள்தான்.

    டேவிட் வார்னரின் பார்ம் ஆஸ்திரேலியாவுக்கு பெரிய கவலை, அவரது தொடரும் டக் பயணம் எப்போது ஒரு ரன் அடிப்பார் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. கடைசியாக ஏப்ரல் 28, 2021இல் சன் ரைசர்ஸ் அணிக்காக சிஎஸ்கேவுக்கு எதிராக 57 ரன்கள் எடுத்தார். அதற்கு முன் 6, அதன் பிறகு 0,2,0 என்று வார்னர் ரன் எடுத்துள்ளார்.அடுத்து இந்தியாவுடன் நாளை பயிற்சி ஆட்டத்திலாவது அவர் சோபிப்பாரா அல்லது சொதப்புவாரா என்பதைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை கனவு தீர்மானமாகும்.

    ஸ்டீவ் ஸ்மித் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார், ஸ்டாய்னிஸ், பிஞ்ச், மார்ஷ், ஆஷ்டன் ஆகர் ஆகியோர் 20 ரன்களுக்கும் மேல் 30க்குள் எடுத்து ஆட்டமிழந்தனர், ஆனால் சேசிங் எளிதாக இல்லை. கடைசி 7 பந்துகளில் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் தேவை. அப்போது ஆஷ்டன் ஆகர் ஹூக் ஷாட்டில் சிக்ஸ் விளாசினார். பிறகு ஜோஷ் இங்லிஷ் ஸ்கூப் பவுண்டரி அடித்து பிறகு எட்ஜில் 4 ரன்கள் அடிக்க ஆஸ்திரேலியா வெற்றி சாத்தியமானது.

    ஐபிஎல் அணியிலிருந்து கேப்டனாகவும் வீரராகவும் ட்ராப் செய்யப்பட்ட வார்னர் நேற்று முதல் பந்திலேயே ஏறி வந்து சவுத்தியை சாத்த நினைத்தார் ஆனால் பந்து ஸ்லிப் திசையில் மார்டின் கப்டில்லின் அபார கேட்ச் ஆனது மீண்டும் ஒரு டக். மாறாக நியூசிலாந்து அணி அதிரடியாகத் தொடங்கியது. மார்டின் கப்டில், 30, டேரில் மிட்செல் 35, கேன் வில்லியம்சன் 37, கடைசியில் ஜேம்ஸ் நீஷம் 18 பந்துகளில் 31 என்று 2 சிக்சர்களுடன் அடிக்க நியூசிலாந்து 158/7.

    கேன் வில்லியம்சன், கப்தில் சேர்ந்து 70 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்த போது ஸ்கோர் 158 ரன்களுக்கும் மேல் வரும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேன் ரிச்சர்ட்ஸன் 3 விக்கெட்டுகளை சாய்க்க நியூசிலாந்து ஸ்கோர் தடைப்பட்டது. ரிச்சர்ட்ஸன் 3/24 என்று நம்பிக்கை ஊட்டினார். மிட்செல் மார்ஷ் 4 ஓவர் 53 ரன்கள், இதில் ஒரே ஓவரில் 30 ரன்கள் பக்கம் கொடுத்தார். ஆடம் சாம்ப்பா அற்புதம் 4 ஓவர் 17 ரன் 2 விக்கெட். ஸ்டார்க் பரவாயில்லை ரகம் 4 ஓவர் 30 ரன்கள் ஒரு விக்கெட்.

    மாறாக நியூசிலாந்து அணி 7 பவுலர்களை சோதனை செய்து பார்த்தது இதில் இடது கை ஸ்பின்னர் மிட்செல் சாண்ட்னர் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். போல்ட்டின் ஐபிஎல் அனுபவம் கைகொடுக்க 3 ஓவர்களில் 13 ரன்களையே கொடுத்தார். ஆனால் டிம் சவுத்தி 4 ஓவர் 42, ஏழு அடி உயர கைலி ஜேமிசன் 3.5 ஓவர் 42 ரன்கள் விளாசப்பட்டார். நியூசிலாந்து அணி பிரதான உலகக்கோப்பை டி20 தொடரில் குரூப் 1-ல் இடம்பெற்றுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: