• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs Eng warm-up| கோலி, புவனேஷ்வர், சூரியகுமார், ஹர்திக் பாண்டியா மோசம்; ராகுல், இஷான் கிஷன் அதிரடியில் இந்தியா வெற்றி

Ind vs Eng warm-up| கோலி, புவனேஷ்வர், சூரியகுமார், ஹர்திக் பாண்டியா மோசம்; ராகுல், இஷான் கிஷன் அதிரடியில் இந்தியா வெற்றி

கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்

துபாயில் நேற்று நடைபெற்ற 2021 டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ராகுல், இஷான் கிஷன், ரிஷப் பண்ட் அதிரடியில் இங்கிலாந்து அணியின் இமாலய இலக்கை விரட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

  • Share this:
    முதலில் பேட் செய்த இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்களைக் குவிக்க இந்திய அணி 19 ஓவர்களில் 192/3 என்று இலக்கை ஊதியது. டாஸ் வென்ற விராட் கோலி முதலில் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார், இங்கிலாந்தின் கேப்டன் ஜாஸ் பட்லர்.

    189 ரன்கள் இலக்கை விரட்டும் போது இஷான் கிஷன் (70), ராகுல் (51) இணைந்து 50 பந்துகளில் 82 ரன்களை விளாசினர். ரோகித் சர்மாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்பட்டாலும் உலகக்கோப்பையில் ராகுல், ரோகித் சர்மாதான் ஓப்பனிங் என்று விராட் கோலி ஏற்கெனவே உறுதி செய்து விட்டார். ராகுல் அதற்கேற்ப நேற்று இங்கிலாந்து பவுலிங்கை புரட்டி எடுத்து 24 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்தார். விராட் கோலி பாவம் 13 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லாமல் 11 ரன்களில் வெளியேறினார்.

    அதுவும் கோலி லியாம் லிவிங்ஸ்டன் லெக்ஸ்பின்னை கொடியேற்றி ஆட்டமிழந்த விதம் உண்மையில் கவலையளிக்கக் கூடியதாகும். அதே போல் சூரியகுமார் யாதவுக்கு திடீரென என்ன ஆயிற்று என்று தெரியவில்லை ஒரே தடவல். 9 பந்துகளில் 8 ரன்கள் என்று டேவிட் வில்லே பந்தில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரிகளுடன் 10 பந்தில் 12 நாட் அவுட் என்றாலும் செம தடவல் இன்னிங்ஸ், பந்து மட்டையில் பட மிகவும் கஷ்டப்பட்டார்.

    இஷான் கிஷன் 46 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்து மிடில் ஆர்டரில் தன்னை வலுப்படுத்திக் கொள்வேன் என்று காட்டியுள்ளார். ஹர்திக் பாண்டியா தடவு தடவென்று தடவினார், கடைசியில் கிறிஸ் ஜோர்டான் ஒரு பந்தை நன்றாக வீசி 3 பந்துகளை படுமோசமாக வீசினார். ஒரு வைடு, ஒரு ஹை புல்டாஸ், இது நோ-பால் ஆகி ரன்களுக்குச் சென்றது.

    9 பந்துகளில் 16 தேவை என்ற சமன்பாடு 8 பந்துகளில் 11 என்று ஆனது. ஹர்திக் பாண்டியா கிடைத்த ஃப்ரீ ஹிட்டை எட்ஜ் பவுண்டரி அடித்தார். கடைசியில் அதே ஓவரில் ரிஷப் பந்த் பவர்ஃபுல் புல் ஷாட்டை சிக்சருக்கு அனுப்ப இந்தியா வென்றது. பண்ட் 14 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 29 நாட் அவுட். மொயின் அலியை வரிசையாக 2 சிக்சர்களை அடித்தார் பண்ட்.

    இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ (49), லியாம் லிவிங்ஸ்டன் (30), மொயின் அலி (43) ஆகியோர் செம பார்மில் இருந்தனர், வெளுத்து வாங்கினர். இந்திய பவுலிங்கில் புவனேஷ்வர் குமார் பவுலிங் கவலையளிக்கக் கூடியது 4 ஓவர் 54 ரன்கள் விளாசப்பட்டார். அஸ்வின் 4 ஓவர் 23 என்று டைட்டாக வீசினார், ராகுல் சாகருக்கு சாத்துப்படி நடந்து 4 ஓவர் 40 ரன். பும்ரா வழக்கம் போல் டைட் 4 ஒவர் 26 ரன்கள் 1 விக்கெட். ஷமி சாத்து வாங்கினாலும் 3 விக்கெட்டுகளை 40 ரன்களுக்குக் கைப்பற்றினார். பும்ரா நம்பிக்கை அளித்தார், அதுவும் பேர்ஸ்டோவுக்கு வீசிய யார்க்கர் அற்புதம். புவனேஷ்வர் குமார் உண்மையில் சொதப்பல், பவுண்டரிகளை அதிகம் கொடுத்தார், கடைசி ஓவரில் இவரை மொயின் அலி 4,6,6 என்று விளாசினார்.

    புதனன்று இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளும் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றன.

    Also Read: திருப்பதி வெங்கடாசலபதி முன் வைத்து ஐ.பி.எல் கோப்பைக்கு பூஜை... படங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: