• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup 2021 India vs Pakistan: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய லெவன் என்ன? அஸ்வின் இல்லை?

T20 World Cup 2021 India vs Pakistan: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய லெவன் என்ன? அஸ்வின் இல்லை?

பாபர் அசாம், விராட் கோலி.

பாபர் அசாம், விராட் கோலி.

அக்டோபர் 24ம் தேதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக்கோப்பை போட்டியில் மோதுகின்றன, கிரிக்கெட்டில் ஆஷஸை விடவும் அதிபரபரப்பு உடையது இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள். அதுவும் பாகிஸ்தான் உலகக்கோப்பையில் இந்தியாவை இதுவரை வென்றதில்லை.

  • Share this:
    அக்டோபர் 24ம் தேதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக்கோப்பை போட்டியில் மோதுகின்றன, கிரிக்கெட்டில் ஆஷஸை விடவும் அதிபரபரப்பு உடையது இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள். அதுவும் பாகிஸ்தான் உலகக்கோப்பையில் இந்தியாவை இதுவரை வென்றதில்லை.

    இதனையடுத்து அணியில் யார் ஆட வேண்டும், எந்த காம்பினேஷன் சிறந்தது என்பதை வெளியிட்டால்தானே அவர்கள் முன்னாள் வீரர்கள்?- ஆம்! இப்போது விவிஎஸ் லஷ்மண் பாகிஸ்தானுடனான் போட்டிக்கு இந்திய அணி, அதாவது ஆடும் லெவன் எப்படியிருக்க வேண்டும் என்று தன் பங்குக்கு ஒரு அணியை தேர்வு செய்துள்ளார். வழக்கம் போல் இதில் சில பெயர்கள் விடுபடுவது ஆச்சரியத்தை அளிக்கவே செய்யும். உதாரணமாக இங்கிலாந்துக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் வெளுத்துக் கட்டிய இஷான் கிஷன் லஷ்மண் தேர்வு செய்யும் அணியில் இல்லை.

    விராட் கோலி அறிவித்த தொடகக் ஜோடியான ரோகித் சர்மா, கே.எல்.ராகுலையே லஷ்மணும் தன் லெவனில் தேர்வு செய்துள்ளார். அதே போல் விராட் கோலி 3ம் நிலையில் இறங்குவார். 4ம் நிலையில் சூரியகுமார் யாதவ், 5ம் நிலையில் ரிஷப் பண்ட், 6ம் நிலையில் ஹர்திக் பாண்டியா, 7ம் நிலையில் ரவீந்திர ஜடேஜா, 8ம் நிலையில் புவனேஷ்வர்குமார், 9ம் நிலையில் பும்ரா.

    10 மற்றும் 11-ம் நிலைக்கு வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாகர் ஆகியோரை லஷ்மண் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் உட்பட 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தியும் அஸ்வினுக்கு லஷ்மண் அணியில் இடமில்லை. இங்கிலாந்துக்கு எதிராகவும் அஸ்வின் நன்றாகவே வீசினார்.

    லஷ்மண் தேர்வு செய்த அணி வருமாறு: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், பும்ரா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாகர்.

    டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 அட்டவணை:





    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: