Home /News /sports /

கோலியிடம் இத்தனை மிமிக்ரி திறமையா?- ஷிகர் தவான் பேட்டிங்கை கலாய்த்து வீடியோ

கோலியிடம் இத்தனை மிமிக்ரி திறமையா?- ஷிகர் தவான் பேட்டிங்கை கலாய்த்து வீடியோ

விராட் கோலி ஷிகர் தவானை மிமிக்ரி.

விராட் கோலி ஷிகர் தவானை மிமிக்ரி.

“ஹை, நான் விராட் கோலி, நான் இப்போது ஷிகர் தவான் பேட்டிங்கை போலி செய்யப்போகிறேன். காரணம் அவர் அந்த இடத்திலேயே தன்னை இழந்து விடுகிறார் என்று நான் கருதுகிறேன். தவான் பேட்டிங் முனையில் இருந்தால் வேடிக்கைதான், நான் அதை பலமுறை எதிர்முனையிலிருந்து பார்த்திருக்கிறேன்”

மேலும் படிக்கவும் ...
    விராட் கோலியை மைதானத்தில் பார்ப்பது போல் நாம் வெளியில் பார்க்க முடியாது, வெளியில் பெரிய ஜாலி வீரர் விராட் கோலி, கேலி கிண்டல் பேசுவது சக வீரர்களை நட்புடன் கலாய்ப்பது என்று இவரது இருப்பு மிகவும் கலகலப்பானதாக இருக்கும் என்று பலரும் கூறுகின்றனர்.

    அதுவும் அவரிடம் இவ்வளவு மிமிக்ரி திறமையா என்று வியக்கும் அளவுக்கு சக வீரர் ஷிகர் தவான் பேட்டிங்கின் போது பந்தை எப்படி எதிர்கொள்ள நிற்பார், பந்து வரும்போது எப்படி பார்ப்பார், பிறகு எப்படி லீவ் செய்வார், லீவ் செய்து விட்டு என்ன செய்வார் என்று சாங்கோபாங்கமாக விராட் கோலி, ஷிகர் தவான் உடல்மொழியைக் கலாய்த்து வீடியோவே வெளியிட்டு விட்டார்.

    அந்த வீடியோவில், “ஹை, நான் விராட் கோலி, நான் இப்போது ஷிகர் தவான் பேட்டிங்கை போலி செய்யப்போகிறேன். காரணம் அவர் அந்த இடத்திலேயே தன்னை இழந்து விடுகிறார் என்று நான் கருதுகிறேன். தவான் பேட்டிங் முனையில் இருந்தால் வேடிக்கைதான், நான் அதை பலமுறை எதிர்முனையிலிருந்து பார்த்திருக்கிறேன்” என்றார் கோலி.



    அதுவும் தவான் சட்டையை மடக்கி விடுவது போல் மடக்கி விட்டு டிரேட் மார்க் தவான் சேட்டைகளை அப்படியே அச்சு அசலாக நமக்குக் காட்டி விட்டார் கோலி. ஸ்டான்ஸ், பந்தைப் பார்ப்பது, பந்தை ஆடாமல் விடுவது, விட்ட பிறகு என்று தவானின் உடல்மொழியை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டார் கோலி.

    இதையும் படிங்க: ஐபிஎல் சாம்பியனான பிறகு 48 மணி நேரத்தில் முற்றிலும் மாறிய தோனி

    ஷிகர் தவான் ஐபிஎல் தொடரில் 587 ரன்களை எடுத்தார். டெல்லி அணியின் டாப் பினிஷில் இவருக்கு பங்களிப்பு அதிகம், ஆனாலும் பாவம் கோலி கடுமையாக வாதாடியும் ஷிகர் தவான் டி20 உலகக்கோப்பையில் இடம்பெறவில்லை.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Captain Virat Kohli, Shikhar dhawan, T20 World Cup

    அடுத்த செய்தி