• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பையில் டாப் 5 அதிர்ச்சிகள்- நெதர்லாந்திடம் இருமுறை தோற்ற இங்கிலாந்து

டி20 உலகக்கோப்பையில் டாப் 5 அதிர்ச்சிகள்- நெதர்லாந்திடம் இருமுறை தோற்ற இங்கிலாந்து

வெஸ்ட் இண்டீஸ் உலக டி20 சாம்பியன்

வெஸ்ட் இண்டீஸ் உலக டி20 சாம்பியன்

2007 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாபவேயிடம் ஆஸ்திரேலியா தோற்றது என்றால் நம்ப முடிகிறதா? அதே போல் டி20 உலகக்கோப்பை தொடர்களின் டாப் 5 அதிர்ச்சித் தோல்விகளின் விவரங்களை இங்கு தொகுத்தளிக்கிறோம்.

  • Share this:
    2007 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாபவேயிடம் ஆஸ்திரேலியா தோற்றது என்றால் நம்ப முடிகிறதா? அதே போல் டி20 உலகக்கோப்பை தொடர்களின் டாப் 5 அதிர்ச்சித் தோல்விகளின் விவரங்களை இங்கு தொகுத்தளிக்கிறோம்.

    டி20 உலகக்கோப்பை 2007- ஆஸ்திரேலியாவை காலி செய்த ஜிம்பாப்வே:

    1983 உலகக்கோப்பையில் எப்படி ஜிம்பாப்வே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது அதிர்ச்சியோ அதே போல்தான் 2007-ல் ஜிம்பாப்வே டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும். ஜிம்பாப்வேயின் சிறந்த பேட்ஸ்மென் பிரெண்டன் டெய்லர் 45 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியின் வலுவான டாப் ஆர்டர், மேத்யூ ஹெய்டன், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், மைக் ஹஸ்சி ஆகியோர் 50 ரன்களுக்குள் பெவிலியன் திரும்பினர். பிராட் ஹாட்ஜ் 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்ததனால் ஆஸ்திரேலியா 138/9 என்று முடிந்தது, இந்த இலக்கை விரட்டும் போது ஜிம்பாப்வே போராடி கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமிருக்க இலக்கைக் கடந்து அதிர்ச்சி வெற்றி பெற்றது.

    2014 டி20 உலகக்கோபை: நெதர்லாந்திடம் மண்ணைக்கவ்விய இங்கிலாந்து:

    மார்ச் 31, 2014 அன்று இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளை 24 ரன்களுக்கு வீழ்த்தினாலும் ஜிம்பாப்வே 134 ரன்கள் இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது. சட்டோகிராமில் நடந்த இந்தப் போட்டியில் இலக்கை விரட்டிய இங்கிலாந்து 88 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சித் தோல்வி கண்டது. நெதர்லாந்தின் முடாசர் புகாரி, லோகன் வான் பீக் இருவரும் இங்கிலாந்தை தோற்கடித்தனர்.

    இங்கிலாந்தின் ரவி பொபாரா மட்டுமே அதிகபட்சமாக 18 ரன்களை எடுத்தார். 8 இங்கிலாந்து வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் காலியாகினர்.

    2014 டி20 உலகக்கோப்பை; பங்களாதேஷை வீழ்த்திய ஹாங்காங்

    மார்ச் 20, 2014 அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் சட்டோகிராம் பிட்ச் வங்கதேசத்தையே போட்டுப்பார்க்க அந்த அணி 108 ரன்களுக்கு மடிந்தது. ஹாங்காங் ஸ்பின்னர்கள் நதீம் அகமட், நிசாகட் கான் வங்கதேசத்தைச் சுருட்டினர். அகமட் 4 விக்கெட்டுகளைச் சாய்க்க, நிசாகட் கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 7 வங்கதேச பேட்ஸ்மென்கள் 3 ரன்களுக்குள் அவுட் ஆகினர்.

    இலக்கை விரட்டிய போது ஹாங்காங் தடுமாறியது, ஆனால் அகமெட் மற்றும் ஹஜீப் அம்ஜத் எப்படியோ 2 பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற்றனர், ஹாங்காங் கொண்டாட்டத்தில் மூழ்கியது.

    2009 டி20 உலகக்கோப்பை - நெதர்லாந்திடம் தோற்ற இங்கிலாந்து

    2009-ல் இங்கிலாந்தின் கோட்டையான லார்ட்ஸிலேயே நெதர்லாந்து அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த முறை இங்கிலாந்து 162 ரன்களை எடுத்தது, ஆனால் நெதர்லாந்து வீரர் டாம் டி குரூத் 30 பந்துகளில் 49 ரன்களை விளாசினார். இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் ரவி பொபாரா, லூக் ரைட் 101 ரன்களை தொடக்கத்தில் சேர்த்தனர்.

    இலக்கை விரட்டிய போது டி குரூத் 30 பந்தில் 49 எடுத்த பிறகு ஆட்டம் கடைசி ஓவருக்குச் சென்ற போது 6 பந்துகளில் 7 ரன்கள் தேவை. கிரீசில் எட்கர் ஷிபர்லி இருந்தார். மறுமுனையில் ரியான் டென் டஸ்சொதே இருந்தார். இருவரும் இரண்டு சிங்கிள்களை எடுக்க கடைசியில் பிராட் ஒரு ஓவர் த்ரோ போட நெதர்லாந்து வென்றது.

    டி20 உலகக்கோப்பை 2016- வெஸ்ட் இண்டீசை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

    2016 டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிதான் வென்றது, இப்போது வரை அவர்கள்தான் உலக சாம்பியன். ஆனால் 2016-ல் வெஸ்ட் இண்டீஸின் ஒரே தோல்வி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வந்ததே. மார்ச் 27ம் தேதி நாக்பூரில் பந்துகள் திரும்பும் பிட்சில் வெஸ்ட் இண்டீஸ் தோற்றது.

    ஆப்கானிஸ்தான் அடித்ததோ வெறும் 124 ரன்கள்தான், ஆனால் ஸ்பின்னர்கள் மூலம் வெஸ்ட் இண்டீஸை 117 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அதிர்ச்சி வெற்றி பெற்றது. ஆப்கானின் நஜிபுல்லா ஸத்ரான் 40 பந்துகளில் 48 அடித்ததற்காக இந்தப் பிட்சில் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: