Home /News /sports /

டி20 உலகக்கோப்பைக்கு பண்ட், தினேஷ் கார்த்திக்கை விட இவர் இருந்தாலே போதும்

டி20 உலகக்கோப்பைக்கு பண்ட், தினேஷ் கார்த்திக்கை விட இவர் இருந்தாலே போதும்

தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக் - ரிஷப் பண்ட்

தினேஷ் கார்த்திக்கை பினிஷிங் ரோலில் எடுக்க வாய்ப்பிருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர், இல்லை அவரை இனிமேல் எடுப்பது பிற்போக்கான முடிவு என்று அணித்தேர்வுக்குழு கருதக்கூடும் அவருக்குப் பதிலாக இளம் வீரர்களான திவேத்தியா, பிரமாதமாக ஆடி வரும் பஞ்சாப் கிங்ஸ் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் போன்றவர்களை தேர்வு செய்யலாம் என்றும் பலரும் பரிந்துரைத்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  ஐபிஎல் 2022 தொடரில் இந்திய இளம் வீரர்கள் பலர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்ற கனவுடன் ஆடிவருகின்றனர். இதில் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக், இதற்காகவென்றே பிரத்யேகாமாக பயிற்சி எடுத்துக் கொண்டு, அபிஷேக் நாயரை தன் சொந்த குருவாக வைத்துக் கொண்டு கடும் பயிற்சியில் ஈடுபட்டு இந்த ஐபிஎல் தொடரில் கலக்குக் கலக்கினார், ஆனால் கடைசி சில போட்டிகளாக அவரது சத்தத்தை காணோம். அதே போல் ரிஷப் பண்ட் டி20க்கு ஒரு ஹைப் என்பது நிரூபணம் ஆகி வருகிறது, அதுவும் நேற்று 7 ரன்களில் ஸ்டம்ப்டு ஆகி கேப்டன் என்பதை மறந்தது போல் வெளியேறினார்.

  தினேஷ் கார்த்திக்கை பினிஷிங் ரோலில் எடுக்க வாய்ப்பிருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர், இல்லை அவரை இனிமேல் எடுப்பது பிற்போக்கான முடிவு என்று அணித்தேர்வுக்குழு கருதக்கூடும் அவருக்குப் பதிலாக இளம் வீரர்களான திவேத்தியா, பிரமாதமாக ஆடி வரும் பஞ்சாப் கிங்ஸ் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் போன்றவர்களை தேர்வு செய்யலாம் என்றும் பலரும் பரிந்துரைத்து வருகின்றனர்.

  ஏற்கெனவே இந்திய அணியில் கே.எல்.ராகுல் இருப்பதால் அவரே விக்கெட் கீப்பிங்குக்குப் போதுமானது ரிஷப் பண்ட்டிற்குப் பதில் வேறு வீரரை தேர்வு செய்யலாம் என்ற கருத்துக்களும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏனெனில் ரிஷப் பண்ட் என்ற ஒரு அதிரடி வீரர் டெஸ்ட்டின் பொக்கிஷம், அவர் டி20 வடிவத்தில் சரியாகச் செயல்பட முடியவில்லை, என்பது 2 ஐபிஎல் தொடர்களாக பார்த்து வருகிறோம், அவரால் ஒரு போட்டியைக் கூட டெல்லிக்காக வெற்றி பெறச் செய்ய முடியவில்லை.

  எப்போது வேண்டுமானாலும் ஆட்டமிழக்கலாம் என்ற நிலை ரிஷப் பண்ட்டிடம் உள்ளது. அவருக்குரிய டவுன் ஆர்டரை அவர் இன்னும் கண்டுப்பிடித்துக் கொள்ளவில்லை. ரவி சாஸ்திரி கூறுவது போல் ரிஷப் பண்ட், ஆந்த்ரே ரசல் போல் கவலையில்லாமல் பேட் செய்ய வேண்டும், ஒரே குறிக்கோள், ஸ்லாட்டில் விழுந்தால் சிக்ஸ் என்பது போல் ஆட வேண்டும் அல்லது சஞ்சு சாம்சன் போல் இறங்கி வந்தெல்லாம் ஸ்பின்னர்களை அடிக்க வேண்டியதில்லை ஸ்டாண்ட் அண்ட் டெலிவர் என்பது போல் நின்ற இடத்திலிருந்தே பவர் ஹிட்டிங் செய்ய வேண்டும்.

  இந்த 2 பாணிகளை அவர் கடைப்பிடித்தாலே தவிர டி20-யில் ரிஷப் பண்ட் கடைத்தேற மாட்டார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

  சரி ரிஷப் பண்ட்டும் வேண்டாம், தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்வது பின்னோக்கிச் செல்வதாகும் என்றால் யாரை தேர்வு செய்வது? விருத்திமான் சஹா தொடக்க வீரராக இறங்கி பவர் ப்ளேயில் சிறப்பாக ஆடி வருகிறார்.

  விருத்திமான் சஹா


  இந்த ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் 13 போட்டிகளில் 301 ரன்கள் எடுத்துள்ளார். தினேஷ் கார்த்திக் 13 போட்டிகளில் 285 ரன்கள் எடுத்துள்ளார், ஆனால் விருத்திமான் சஹா 8 போட்டிகளிலேயே 281 ரன்களை எடுத்துள்ளார், ஓப்பனிங்கில் பவர் ப்ளேயில் அபாரமாக ஆடுகிறார். சிறிய இலக்காக இருந்தால் நின்று ஜெயிக்க வைத்து விடுவார்.

  விக்கெட் கீப்பிங்கில் இன்றளவிலும் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாதான். எனவே ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்கா தொடரில் ஓய்வு தரவிருப்பதால் தொடக்கத்தில் சஹாவை இறக்கி அவரையே விக்கெட் கீப்பராகவும் செயல்பட வைக்கலாம். அவரை அப்படியே டி20 உலகக்கோப்பைக்கும் தொடக்க வீரராக, விக்கெட் கீப்பராகத் தயார் படுத்தினால் பாகிஸ்தானில் முகமது ரிஸ்வான் செய்யும் வேலையை விருத்திமான் சஹா செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

  ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம் என்பதே நம் கருத்து, அதற்கு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சஹாவை அணியில் எடுத்து தொடக்க வீரராக களமிறக்கிப் பார்க்கலாம்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Dinesh Karthik, IPL 2022, Rishabh pant, Wriddhiman Saha

  அடுத்த செய்தி