ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

T20 World Cup: ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி!

T20 World Cup: ஜிம்பாப்வே அணியிடம் பாகிஸ்தான் அதிர்ச்சி தோல்வி!

பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே

பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே

அதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பாபர் அசாம் 4 ரன்களிலும் முகமது ரிஸ்வான் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustraliaAustraliaAustraliaAustralia

  இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

  டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பாகிஸ்தான் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

  டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கி ஜிம்பாப்வே, 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் குவித்தது. இதில் சீன் வில்லியம்ஸ் அதிகபட்சமாக 31 ரன்களை எடுத்து அணிக்கு வலு சேர்த்தார்.

  இதையும் வாசிக்க: இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் சம்பளம்... கிரிக்கெட் வாரியம் முடிவு 

  இதனையடுத்து 131 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பாகிஸ்தான் அணி. அதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பாபர் அசாம் 4 ரன்களிலும் முகமது ரிஸ்வான் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் சொர்ப்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

  இறுதியில் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் சேஸ் செய்து, ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்ட பாகிஸ்தான், தற்போது ஜிம்பாப்வேவிடம் இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Pakistan cricket, T20 World Cup, Zimbabwe