• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • SL vs BAN | அசலங்கா, ராஜபக்சே அதிரடி... வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை

SL vs BAN | அசலங்கா, ராஜபக்சே அதிரடி... வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை

BAN vs SL

BAN vs SL

டி20 உலகக் கோப்பை தொடரின் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • Share this:
    டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் உள்ள இலங்கை - வங்கசேதம் அணிகள் மோதின. சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக முகமது நயிம் மற்றும் லித்தன் தாஸ் களமிறங்கினார்கள். வங்கதேச அணி நிதானமாக விளையாடி ரன் சேர்த்து வந்தது. லித்தன் தாஸ் 16 ரன்களில் அவுட்டாக அடுத்தது வந்த ஷகிப் அல் ஹசன் 10 ரன்களில் அவுட்டாகினர்.

    முஷ்பிகுர் ரஹீம் உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் நயிம் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நயிம் 62 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். முஷ்பிகுர் ரஹீம் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.

    172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் அதிர்ச்சியாக அமைந்தது. குசல் பெரேரா 1 ரன்னிலும், நிஸ்ஸங்க 24 ரன்னிலும் அவுட்டாகினர். அவிஷ்க பெர்னாண்டோ ரன் ஏதும் எடுக்காமலும் வனிந்து ஹசரங்க 6 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இலங்கை 79 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வந்தது. சரித் அசலங்கா மற்றும் பானுகா ராஜபக்ச சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர். இந்த ஜோடியின் அபார ஆட்டத்தால் இலங்கை 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்திருந்த போது இலக்கை எட்டியது. சரித் அசலங்கா 80 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த அசலங்கா ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: