முகப்பு /செய்தி /விளையாட்டு / T20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி!

T20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு! ரசிகர்கள் மகிழ்ச்சி!

இலங்கை அணி

இலங்கை அணி

ஆசியக் கோப்பையை வென்று சாம்பியன்களான இலங்கை அணியின் தலைவிதி என்னவெனில் உலகக்கோப்பை பிரதான சுற்றுக்கு வரும் முன் தகுதிச்சுற்று அணிகளுடன் மோதிதான் சூப்பர் 12 சுற்றுக்குள் தகுதி பெற முடியும். இந்நிலையில் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆசியக் கோப்பையை வென்று சாம்பியன்களான இலங்கை அணியின் தலைவிதி என்னவெனில் உலகக்கோப்பை பிரதான சுற்றுக்கு வரும் முன் தகுதிச்சுற்று அணிகளுடன் மோதிதான் சூப்பர் 12 சுற்றுக்குள் தகுதி பெற முடியும். இந்நிலையில் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி தொடங்குகிறது. ஆசிய கோப்பையில் விளையாடிய இலங்கை அணி வீரர்களில் பெரும்பாலானோர் டி20 உலகக்கோப்பையிலும் இடம்பெற்றுள்ளனர். டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

முதல் சுற்றில் விளையாடும் அணிகளில் இருந்து நான்கு  அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் ஆடிதான் இலங்கை அணி பிரதான சுற்றுக்குத் தகுதி பெற வேண்டும். வெஸ்ட் இண்டீஸின் நிலைமையும் இதுவே. இந்நிலையில் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | துலீப் கோப்பை கிரிக்கெட் : தலையில் தாக்கிய பந்து.. வலியால் துடித்த வெங்கடேஷ் அய்யர்

தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்க குணதிலகா, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுகா ராஜபக்சே, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சாமிக்க கருணரத்னா, தில்ஷான் மதுசாங்க, பிரமோத் மதுஷன், துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா.

ரிசர்வ் வீரர்கள்: அஷேன் பண்டாரா, பிரவீன் ஜெயவிக்ரமா, தினேஷ் சண்டிமால், பினுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ

ஆசிய கோப்பை வென்ற இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து, யுஏஇ ஆகிய அணிகளுடன் மோத வேண்டிய நிலை உள்ளது.

First published:

Tags: Cricket, Sports, Srilanka, T20 World Cup