உலக கோப்பை டி20 தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில், இத்தொடருக்காக அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில் திடீரென ஒரு மாற்றம் நடந்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, எதிர்வரும் உலகக் கோப்பை டி20 தொடருக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்ஸர் பட்டேலுக்கு பதிலாக ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இந்திய அணி நிர்வாகத்துடன் இந்திய சீனியர் கிரிக்கெட் தேர்வுக்குழு கமிட்டி மேற்கொண்ட ஆலோசனையின்படி ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஷர்துல் தாக்கூர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வருபவர்.
15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்திருந்த அக்ஸர் பட்டேல், இனி துணை வீரர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவார். ஆனால் இந்த திடீர் மாற்றத்துக்கான காரணத்தை பிசிசிஐ வெளியிடவில்லை. ஆனால் அணியில் வேகப்பந்து வீசக்கூடிய ஆல்ரவுண்டர் தேவை எனக் கருதி இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே அந்த நிலையில் இருக்கக்கூடிய ஹர்திக் பாண்டியா, டி20 உலகக் கோப்பை தொடரில் பந்துவீச மாட்டார் என தெரிகிறது.
Also Read: ஜாதகம் அடிப்படையில் மாணவர் சேர்க்கை.. அரியவகை பள்ளி.. வித்தியாசமான கற்பித்தல் முறை!
2019ம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவுக்கு செய்யப்பட்ட முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் அதிகமாக பந்துவீசவில்லை. துபாயில் நடைபெற்று வரும் 2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் கூட மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடிவந்த ஹர்திக் பாண்டியா பந்துவீசவில்லை.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான், சன் ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், எதிர்வரும் உலகக் கோப்பையில் இந்திய அணியை தயார் செய்வதற்கு உதவுவார்கள். இவர்கள் இந்திய அணியின் பயோ பபுலில் இணைவார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Also Read: ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் பைக்குக்கு மாற்றாக கிடைக்கும் சிறந்த பைக் மாடல்கள் எவை?
மேற்கண்ட மூன்று வீரர்கள் தவிர்த்து லுக்மன் மெரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கரண் சர்மா, ஷாபாஸ் அகமது மற்றும் கவுதம் ஆகியோரும் இந்திய அணிக்கு உதவுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Axar patel, Shardul thakur, T20 World Cup