ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

PAK vs NZ: மேகம் கருக்குது.. டி20 உலகக் கோப்பை அரையிறுதியை நடக்க விடுமா மழை?

PAK vs NZ: மேகம் கருக்குது.. டி20 உலகக் கோப்பை அரையிறுதியை நடக்க விடுமா மழை?

பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள்

பாகிஸ்தான் நியூசிலாந்து அணிகள்

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் (PAK vs NZ) சிட்னியில் நேருக்கு நேர் மோதுகின்றன. சிட்னியில் இந்திய நேரப்படி 1:30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inte, IndiaSydneySydneySydney

  டி20 உலக கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இன்று பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சையில் களமிறங்கவுள்ளனர்.

  டி20 உலகக் கோப்பையின் 8வது சீசன் (டி20 உலகக் கோப்பை 2022) நாக் அவுட் சுற்றுக்கு வந்துள்ளது. மொத்தம் 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. இப்போது அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளன.

  இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் (PAK vs NZ) சிட்னியில் நேருக்கு நேர் மோதுகின்றன. சிட்னியில் இந்திய நேரப்படி 1:30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.

  இந்நிலையில் இன்று சிட்னியில் வானிலை குறித்து பார்க்கும் போது, 30% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தொடரில் வானிலை காரணமாக ஏற்கனவே பல ஆட்டங்கள் நடைபெறாமல் போனது. ஒருவேலை இந்த ஆட்டமும் மழையால் ரத்தானால், என்ன நடக்கும் என்பதை நடக்கும் என பலரும் ஊகித்து வருகின்றனர்.

  ஐசிசி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இரண்டிற்கும் ரிசர்வ் நாளை வைத்துள்ளது. நவம்பர் 9ஆம் தேதி முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டால், இரண்டாம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடங்கும். உதாரணமாக, முதல் நாளில் ஒரு அணி 7 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தால், இரண்டாவது நாள் ஆட்டம் இங்கிருந்து தொடங்கும்.

  டிண்டர் செயலியில் பழக்கம்.. பாரில் சந்திப்பு- இலங்கை வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான பாலியல் புகாரில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் (news18.com)

  மழை காரணமாக இரண்டாவது நாளில் கூட ஆட்டத்தை முடிக்க முடியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு வரும். அத்தகைய சூழ்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து பலன் பெறும். நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் குரூப்-1ல் முதலிடத்திலும், இந்திய அணி 8 புள்ளிகளுடன் குரூப்-2ல் முதலிடத்திலும் உள்ளன.

  இரண்டாவது அரையிறுதியில் இந்திய அணி நவம்பர் 10-ம் தேதி அடிலெய்டில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணியை எதிர்கொள்வார்கள்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: PakVsNz, T20 World Cup