• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Ind vs Sco | இந்திய அணிக்கு 86 ரன்கள் வெற்றி இலக்கு

Ind vs Sco | இந்திய அணிக்கு 86 ரன்கள் வெற்றி இலக்கு

Ind vs Sco

Ind vs Sco

டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 86 ரன்கள் இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவு போட்டியில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    டாஸ்க்கு பின் பேசிய விராட் கோலி, எனது பிறந்தநாளில் டாஸ் வென்றுள்ளேன். எனது பிறந்தநாள் அன்று விளையாடும் முதல் போட்டி இது என்று சிரித்தப்படியே கூறினார். மேலும் சர்துல் தாகூருக்கு பதிலாக மூன்றாவது சூழற்பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தியை அணியில் சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்காமல் திணறியது. டாப் ஆர்டர் மேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் பெலியன் திரும்பியதால் அந்த அணி சொற்ப ரன்களில் சுருண்டது. 17.4 ஓவர்களில் ஸ்காட்லாந் அனைத்து விக்கெட்களையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து 86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: