Home /News /sports /

ஸ்காட்லாந்தை 109 ரன்களில் சுருட்டிய நமிபியா

ஸ்காட்லாந்தை 109 ரன்களில் சுருட்டிய நமிபியா

ஸ்காட்லாந்து

ஸ்காட்லாந்து

நமிபியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 12 அணிகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அபுதாபியில் நடைபெறும் இன்றைய போட்டியில் நமிபியாவும், ஸ்காட்லாந்து அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற நமிபியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக முன்சேவும், க்ராஸும் களமிறங்கினர். அதில், முன்சே ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    அதனையடுத்து, களமிறங்கிய மேக்லியாடும், பெரிங்டானும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஐந்தாவது வீரராக களமிறங்கிய லிசக் 27 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். கிஹிஸ் க்ரேவியேஸ் 25 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரராக களமிறங்கிய க்ராஸ் 19 ரன்கள் குவித்தார். ஆட்டநேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு ஸ்காட்லாந்து அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. நமிபியா அணி சார்பில் ரூபன் ட்ரம்பெல்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: T20 World Cup

    அடுத்த செய்தி