• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியாவால் சிக்கல்; அக்.15க்குள் முடிவெடுக்க வேண்டும்

டி20 உலகக்கோப்பை: ஹர்திக் பாண்டியாவால் சிக்கல்; அக்.15க்குள் முடிவெடுக்க வேண்டும்

ஹர்திக் பாண்டியா - ரோஹித் சர்மா

ஹர்திக் பாண்டியா - ரோஹித் சர்மா

ஹர்திக் பாண்டியா பந்து வீசுவதில்லை என்பதால் டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்குக் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அக்டோபர் 15ம் தேதிக்குள் கூடுதல் பவுலரை இந்திய அணி சேர்த்தாக வேண்டும்.

  • Share this:
    ஹர்திக் பாண்டியா பந்து வீசுவதில்லை என்பதால் டி20 உலகக்கோப்பை இந்திய அணிக்குக் கூடுதல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அக்டோபர் 15ம் தேதிக்குள் கூடுதல் பவுலரை இந்திய அணி சேர்த்தாக வேண்டும். இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

    டி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா முதுகுவலி பிரச்சினையால் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஒரு ஆட்டத்தில் கூட பந்து வீசவில்லை. ஹர்திக் பாண்டியாவையும் சேர்த்து இந்திய அணியில் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பாண்ட்யாவால் பந்து வீச இயலாத பட்சத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் பற்றாக்குறையாகி விடும் நிலைமை உள்ளது.

    இந்திய அணி உலக கோப்பை போட்டியில் நேரடியாக சூப்பர்-12 சுற்றில் ஆடுவதால், அணியில் மாற்றம் செய்ய வருகிற 15-ந்தேதி வரை அவகாசம் உண்டு என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அணியில் மாற்றம் செய்வது குறித்து சேத்தன் சர்மா தலைமையிலான பிசிசிஐ தேர்வுக் குழு, இந்திய உலகக் கோப்பை அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளரைச் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. தீபக் சாஹர் அல்லது ஷர்துல் தாக்கூர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குக் கலக்கிய காஷ்மீர் பவுலர், மணிக்கு 153 கிமீ வேகம் வீசும் உம்ரன் மாலிக் நெட் பவுலராக இருந்து வருகிறார், அவருக்கே ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாமே. நிச்சயம் ஆவேஷ் கான் நேற்று போட்டுக்கொடுத்த புல்டாஸ்களுக்குப் பிறகு அவரை சேர்ப்பது சரிப்பட்டு வராது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடது கை வேகப்பந்து வளரும் நட்சத்திரம் அர்ஷ்தீப் சிங், கார்த்திக் தியாகி, ஷிவம் மாவி ஆகியோர்களையும் பரிசீலித்துப் பார்க்கலாம்.

    ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: