• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பாகிஸ்தான்

தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பாகிஸ்தான்

பாகிஸ்தான், நியூசிலாந்து

பாகிஸ்தான், நியூசிலாந்து

நியூசிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பைத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றுவருகிறது. தற்போது சூப்பர் 12 அணிகளுக்கு இடையே லீக் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, நியூசிலாந்து அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில், டார்யில் மிட்சேல் களமிறங்கினர். இருவரும் அணிக்கு நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். 20 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்டின் கப்தில் ஹரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து மெட்சேலும் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சன், ஜேம்ஸ் நீசம் களமிறங்கினர். நீசம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். வில்லியம்சன், டீவான் கான்வே இணை நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தது. டீவன் கான்வே 27 ரன்களிலும், வில்லியம்சன் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுஃப் 4 ஓவர் வீசி 22 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதனையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகம்மது ரிஸ்வான், பாபர் ஆசம் களமிறங்கினர். இந்தியாவுடனான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசம் சௌத்தி பந்தில் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து ஃபாகர் ஜமன் களமிறங்கினார். அவரும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய முகம்மது ஹஃபீஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய முகம்மது ரிஸ்வான் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக களமிறங்கிய சோயப் மாலிக் 26 நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தார். இமத் வசிம் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். ஏழாவது வீரராக களமிறங்கிய ஆசிப் அலி இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடி 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுபுறம் சோயப் மாலிக் 26 ரன்களுடன் களத்தில் நின்றார். 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: