• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • PAK vs AFG | பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி... அரையிறுதி வாய்ப்பு உறுதி

PAK vs AFG | பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி... அரையிறுதி வாய்ப்பு உறுதி

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி

டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் முகமது ஷாஜத் 8 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் ஆப்கானிஸ்தான் 76 ரன்களுக்கு 6 விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது.

    இந்நிலையில் கேப்டன் முகமது நபி மற்றும் குல்பதின் நைப் சிறந்த பார்டனர்ஷிப்பை அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஆப்கானிஸ்தான் இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்தது. முகமது நபி மற்றும் குல்பதின் நைப் தலா 35 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடியது. தொடக்க வீரர் ரிஷ்வான் 8 ரன்னில் ஆட்டமிழந்தாலும் கேப்டன் பாபர் ஆஷம் 51 ரன்கள் எடுத்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆப்கன் அணியும் ரன்னை சிக்கனமாக வழங்கி பாகிஸ்தான் அணிக்கு நெருக்கடி கொடுத்தது.

    பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்த நிலையில் கடைசி 2 ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தானுக்கு 12 ரன்ரேட் இருந்ததால் போட்டி பரபரப்பாக இருந்தது. 19-வது ஓவரை எதிர்கொண்ட அஷிப் அலி 4 சிக்சர்களை விளாசி பாகிஸ்தானை வெற்றியடைய செய்தார். அஷிப் அலி 7 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 25 ரன்கள் எடுத்து பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

    சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் ஹாட்ரிக் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ஆட்டநாயகன் விருதை அதிரடியாக விளையாடிய அஷிப் அலி தடடி சென்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: