• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup, Semifinal:விதி வலியது: ஹசன் அலி கேட்சை விட்ட பிறகு 3 சிக்ஸ்- பாகிஸ்தான் தோல்வியின் பரிதாபம்

T20 World Cup, Semifinal:விதி வலியது: ஹசன் அலி கேட்சை விட்ட பிறகு 3 சிக்ஸ்- பாகிஸ்தான் தோல்வியின் பரிதாபம்

ஹசன் அலி விட்ட கேட்ச்.

ஹசன் அலி விட்ட கேட்ச்.

அடுத்த பந்தை ஷாகின் அப்ரீடி லெக் சைடில் வீசி வைடு கொடுத்தார். அடுத்த பந்துதான் அந்த விதிச்சம்பவம் நிகழ்ந்தது, ஸ்டம்புக்கு வீசினார் அப்ரிடி, அதை வேட் மிட்விக்கெட்டில் தூக்க நினைத்தார் சரியாகச் சிக்கவில்லை, கேட்ச் ஆகச் சென்றது. அங்கு ஹசன் அலிக்கு இடது புறம் பந்து சென்றது, அவர் தடதடவென ஓடி வந்ததில் பந்துக்கு முன்னால் வந்து விட்டார். பந்து விரல்கள் வழியாக தரை தட்டியது, மிகப்பெரிய டிராப்,

  • Share this:
    துபாயில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டு வெளியேறியது என்றே கூற வேண்டும்.

    இதில் விதி வலியது என்பது என்னவெனில் 18வது ஓவரில் ஹசன் அலி 15 ரன்களைக் கொடுத்தார். 19வது ஓவரில் ஷாகின் அப்ரீடி அதுவரை 3 ஓவர் 13 ரன் என்று அசத்தலகா வீசி விட்டு பந்து வீச வருகிறார். 2 ஓவர், வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலை முதல் இரண்டு பந்துகளில் 1 ரன் தான் வந்தது. ஸ்டாய்னிஸ் லெக் பை எடுக்க மேத்யூ வேட் ஸ்ட்ரைக் முனைக்கு வந்தார்.

    அடுத்த பந்தை ஷாகின் அப்ரீடி லெக் சைடில் வீசி வைடு கொடுத்தார். அடுத்த பந்துதான் அந்த விதிச்சம்பவம் நிகழ்ந்தது, ஸ்டம்புக்கு வீசினார் அப்ரிடி, அதை வேட் மிட்விக்கெட்டில் தூக்க நினைத்தார் சரியாகச் சிக்கவில்லை, கேட்ச் ஆகச் சென்றது. அங்கு ஹசன் அலிக்கு இடது புறம் பந்து சென்றது, அவர் தடதடவென ஓடி வந்ததில் பந்துக்கு முன்னால் வந்து விட்டார். பந்து விரல்கள் வழியாக தரை தட்டியது, மிகப்பெரிய டிராப், கேட்சை விடவில்லை, கோப்பையை நழுவ விட்டார் என்று ஸ்டீவ் வாஹ் 1999 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா வீரர் கிப்சிடம் கூறினாரே அதுபோல்தான். இது கேட்ச் ட்ராப் என்பதோடு 2 ரன்களாகவும் ஆனது.

    கேட்சை விட்ட ஹசன் அலி.


    அதற்கு அடுத்த பந்தை யார்க்கராக வீச நினைத்தார் ஷாகின் அப்டீரி, ஆனால் வேட் ஒரு நம்ப முடியாத ஷாட்டை ஆடினார், அத்தனை ஸ்டம்புகளையும் காட்டுமாறு நகர்ந்து வந்து ஒரு ஸ்கூப் ஷாட் ஆடினாரே பார்க்கலாம் ஃபைன்லெக் திசையில் அதிர்ச்சி சிக்ஸ் ஆனது. அடுத்த பந்தை அப்ரீடி கட்டராக வீச உள்ளே வந்த பந்தை தன் முன் காலை விலக்கிக் கொண்டு மிட் விக்கெட்டில் ஒரே போடு போட்டார் சிக்ஸ். மீண்டும் கடைசி பந்தையும் வேட் நம்ப முடியாத ஸ்கூப் ஷாட்டில் விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் சிக்ஸ் அடிக்க பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி, ஆஸ்திரேலியாவுக்குக் குஷி.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் போட்டி முடிந்து கூறுகையில் இந்த ஹசன் அலி விட்ட கேட்சை மறக்காமல் குறிப்பிட்டார். “அந்தக் கேட்சை எடுத்திருந்தால் ஆட்டம் வேறு மாதிரியாக இருந்திருக்கும்” என்றார்.

    அவர் கூறுவது முற்றிலும் உண்மைதான். ஒரு கேட்ச் ட்ராப் ஆனபிறகே ஒரு பவுண்டரி வந்தாலே பவுலர்கள் கடுப்பாகி விடுவார்கள், அதுவும் ஒரு கேட்ச் ட்ராப் அதன் பிறகு 3 சிக்சர்கள். ஆட்டமே பறிபோய்விட்டது என்றால் நிச்சயம் ஹசன் அலி கரியரையே அது பாதித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் ஹசன் அலி 4 ஓவர்களில் 44 ரன்கள் என்று வாரி வழங்கினார். அதுவும் முக்கியமான ஓவரில் 15 ரன்கள் வாரி வழங்கி கேட்சையும் கோட்டை விட்டது அவருக்கான பாகிஸ்தான் கதவுகள் அடைக்கப்பட்டதாகவே கருத வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: