• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பாகிஸ்தானுக்கு 2வது டி20 உலகக்கோப்பையை வெல்வார் ஷோயப் மாலிக்- அக்ரம், அப்ரீடி நம்பிக்கை

பாகிஸ்தானுக்கு 2வது டி20 உலகக்கோப்பையை வெல்வார் ஷோயப் மாலிக்- அக்ரம், அப்ரீடி நம்பிக்கை

ஷோயப் மாலிக்.

ஷோயப் மாலிக்.

பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்ட மூத்த ஆல்ரவுண்டர் ஷோயப் மாலிக் பாகிஸ்தானுக்காக 2வது டி20 உலகக்கோப்பையை வென்று தருவார் என்று வாசிம் அக்ரம் மற்றும் ஷாகித் அப்ரீடி ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஷோயப் மாலிக்கிற்கு வயது 39 என்பது குறிப்பிடத்தக்கது. 

  • Share this:
    1999-ல் ஷோயப் மாலிக் பாகிஸ்தான் அணியில் அறிமுகமாகும் போது இப்போதைய வீரர்களான ஷாகின் அப்ரீடி, முகமது வாசிம், ஹைதர் அலி ஆகியோர் பிறக்கவில்லை. கேப்டன் பாபர் அசாம், வைஸ் கேப்டன் ஷதாப் கானுக்கு அப்போது வயது 5 தான். ஆனால் இன்று இவர்கள் சேர்ந்து ஆடுகின்றனர்.

    ஷோயப் மாலிக்கை அறிமுகம் செய்த வாசிம் அக்ரம் கூறும்போது, “ஷோயப் மாலிக்கை நான் தேர்வு செய்யும் போது அவருக்கு 16-17 வயது இருக்கும் மிகவும் ஒல்லியாக இருப்பார். நான் பவுலராகவே அவரை தேர்ந்தெடுத்தேன். ஆனால் பேட்டிங் நன்றாக ஆடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஷோயப் மாலிக் பாகிஸ்தான் கிரிக்கெட்டை காப்பாற்றியவர் என்றுதான் கூற வேண்டும்.

    இப்போது கூட ஃபிட்னெஸில் இவரை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது, பயிற்சியிலும் தீவிரமாக இருக்கிறார். இளம் வீரர்கள் இவரை ரோல் மாடலாக ஏற்க வேண்டும். உள்நாட்டு கிரிக்கெட்டில் இவர் காலத்தில் பிறக்காத வீரர்களுக்கு இணையாக போட்டியில் இறங்குகிறார் மாலிக். நன்றாக ஆடுகிறார் அதனால் இந்த உலகக்கோப்பையில் உச்சம் தொட விரும்புகிறார்” என்றார் வாசிம் அக்ரம்.

    முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரீடியும், “டி20 உலகக்கோப்பைக்கு ஷோயப் மாலிக்கை அணியில் தேர்வு செய்ததைப்பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மூத்த வீரராக நிச்சயம் அவரது பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும். இரண்டாவது டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தானுக்காக அவர் வென்று தருவார் என்று நம்புகிறோம்” என்றார்.

    2007 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவுடன் இறுதியில் தோற்கும்போது அணியில் இருந்தார் மாலிக், 2009-ல் பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பையை வென்ற போது மாலிக் அணியில் இருந்தார். 2010- இல்லை, அதம் பிறகு 3 உலகக்கோப்பை அணியிலும் மாலிக் இடம்பெற்றிருந்தார். இதுதான் அவரது கடைசி தொடர் எனவே உச்சத்தில் முடிக்க நிச்சயம் கடுமையாகப் பாடுபடுவார்.

    பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், ஷோயப் மாலிக்கை பிளேயிங் லெவனில் எப்படியாவது நுழைக்க வேண்டும், அவரது அனுபவமும் நமக்குப் பயனளிக்கும் இன்றும் உடல் தகுதி அளவில் அவரை மிஞ்ச ஆள் இல்லை என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: