• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டம் - 176 ரன்கள் குவித்த பாகிஸ்தான்

தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டம் - 176 ரன்கள் குவித்த பாகிஸ்தான்

பாகிஸ்தான் வீரர்கள்

பாகிஸ்தான் வீரர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக முகம்மது ரிஸ்வான், கேப்டன் பாபர் ஆசம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். விக்கெட் இழப்பின்றி அணியை அழைத்துச் சென்றனர்.

    10-வது ஓவரில் பாகிஸ்தான் அணி 71 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. 34 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தநிலையில் பாபர் ஆசம் சம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஃபக்கர் ஷமாம் களமிறங்கினார். அவர் நிதானமான ஆட்டத்தைத் தொடங்கினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகம்மது ரிஸ்வான் 52 பந்துகளில் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

    அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆசிப் அலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய ஃபக்கர் ஷமாம் இறுதியில் அதிரடியைக் காட்டினார். ஸ்டார்க்கின் பந்துவீச்சைச் சிறதடித்தார். அவருடைய இறுதி ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதன்மூலம் பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு176 ரன்கள் குவித்தது.

    ஃபக்கர் ஷமாம் 32 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 55 ரன்களைக் குவித்தார். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: