ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ரியல் மிஸ்டர் பீனை அனுப்பவும்.. ஜிம்பாப்வே அதிபருக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பிரதமர்

ரியல் மிஸ்டர் பீனை அனுப்பவும்.. ஜிம்பாப்வே அதிபருக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பிரதமர்

ஜிம்பாப்வே அதிபருக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பிரதமர்

ஜிம்பாப்வே அதிபருக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் பிரதமர்

T20 World Cup | ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் பாகிஸ்தானையும் விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai [Madras], India

  டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை ஜிம்பாப்வே ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில் இருநாட்டு தலைவர்களும் ட்வீட்டரில் மிஸ்டர் பீனை குறிப்பிட்டு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

  டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் - ஜிம்பாப்வே அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

  சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள நிலையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் பாகிஸ்தானையும் விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

  ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் தனது ட்விட்டர் ப்க்கத்தில், ஜிம்பாப்வேவுக்கு இது மிகவும் சிறப்பான வெற்றி. வீரர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்த முறை நிஜமான மிஸ்டர் பீனை அனுப்புங்கள் என பாகிஸ்தானை விமர்சித்து பதிவிட்டிருந்தார்.

  ஜிம்பாப்வே அதிபரின் விமர்சனத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் சாரிஃப் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், எங்களிடம் நிஜமான மிஸ்டர் பீன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிஜமான கிரிக்கெட் வெறி இருக்கிறது. சிறப்பாக விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார்.

  Also Read : பயிற்சி மைதானம் தூரம்.. உணவுக்கூட சரியில்லை - இந்திய வீரர்கள் அதிருப்தி

  பாகிஸ்தான் - ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இந்த மோதலில் மிஸ்டர் பின் எப்படி வந்தார் என்று பலருக்கும் குழப்பம் இருக்கலாம். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வு ஒன்று தான் இதற்கு காரணம். கடந்த 2016ம் ஆண்டு ஜிம்பாப்வேவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரபல மிஸ்டர் பீன் கதாப்பாத்திரத்தில் நடித்த ரோவன் அத்கின்சான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு சென்றதோ பாகிஸ்தானை சேர்ந்த போலி மிஸ்டர் பீன். ஜிம்பாப்வே மக்கள் மற்றும் அரசு நாடக நடிகரான ஆசிப் முகமுதுக்கு உற்சாக வரவேற்பும் கொடுத்து இருந்தது.

  இந்த நிகழ்வை ஜிம்பாப்வே ரசிகர் ஒருவர் ட்விட்டரில் சுட்டிக்காட்டி இருந்தார். ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். போலியான பாகிஸ்தான் பீனை எங்களிடம் அனுப்பினீர்கள். இதற்கு இந்த போட்டியின் மூலம் பழிதீர்க்கவுள்ளோம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் ரசிகர்களும் முடிந்தால் செய்து பாருங்கள் என்று வீரவசனம் எல்லாம் சொல்லி இருந்தார்.

  ஆனால் கடைசியில் பாகிஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியின் தோல்வியை ஜிம்பாப்வே ரசிகர்கள் கேலி செய்தும் தங்கள் அணியின் வெற்றியை கொண்டாடியும் வருகின்றனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: T20 World Cup