• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • T20 World Cup | இந்திய அணி பேட்டிங்... இரு அணிகளின் Playing XI - முழு விவரம்

T20 World Cup | இந்திய அணி பேட்டிங்... இரு அணிகளின் Playing XI - முழு விவரம்

IND vs PAK

IND vs PAK

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

  • Share this:
    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-2ல் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி இரவு 7.30 மணிக்கு துபாய் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

    துபாய் சர்வதேச மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட்டின் படி இது பேட்டிங்கிற்கு சாதகமான ஒன்றாகும். இதனால் போட்டியில் சிக்ஸர்கள், பவுண்டரிகளுக்கு பஞ்சாமிருக்காது. பந்துவீச்சை பொறுத்தவரை மிடில் ஓவர்களில் சுழற்பந்துக்கு சாதகமாகவும் இறுதி ஓவர்களில் வேகப்பந்திற்கு சாதகமாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மைதானத்தில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் 60 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.

    இந்திய அணி : ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்டிக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா

    பாகிஸ்தான் அணி : பாபர் அசாம், முகமது ரிஷ்வான், ஃபக்கர் ஜமான், முகமது ஹபிஷ், சோகிப் மாலிக், அஷிப் அலி, இமத் வாசிம் , சதாப் கான், ஹசன் அலி, ஹரிஸ் ரவுப், ஷகின் அப்ரிடி

    உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை ஒரு முறை கூட பாகிஸ்தான் வென்றது இல்லை. இதுவரை 20 ஓவர், 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர் இதில் அனைத்திலும் இந்தியா வெற்றி வாகை சூடி சாதனை மேல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

    1992 முதல் 2019 வரை நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் 7 முறை இரு அணிகளும் மோதியுள்ளன இதில் அனைத்திலும் இந்தியாவிற்கே வெற்றி முகம். அதே போல் 2007 முதல் 2016 வரை நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் ஐந்து முறை இரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. ஐந்திலும் இந்தியா வெற்றி வாகை சூடி அசத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: