ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Pak | இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயத்த பாகிஸ்தான்

Ind vs Pak | இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயத்த பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான்

India vs Pakistan | டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணிக்கு 160 ரன்களை பாகிஸ்தான் இலக்காக நிர்ணயத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மெல்போர்னில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 வேகம் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

  இந்திய அணியின் அனுபவ வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவர் முதலே இந்தியாவின் வேகத்தில் பாகிஸ்தான் தடுமாற ஆரம்பித்தது. இரண்டாவது ஓவரை ஹர்ஸ்திப் சிங் வீசினார். முதல் பந்திலேயே பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஷம் எல்.பி.டபுள்யூ முறையில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

  அடுத்தடுத்த ஓவர்களிலும் பாகிஸ்தான் வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினார்கள். 4-வது ஓவரில் ஹர்ஸ்திப் சிங் பந்தை தூக்கி அடிக்க முயன்ற ரிஷ்வான் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதையடுத்து ஷான் மசூத் மற்றும் இப்திகார் அகமது பார்ட்னர்ஷிப் அமைத்து நிலையாக ஆடினார்கள்.

  இப்திகார் அகமது 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்தார். அதற்கு அடுத்த வந்த வீரர்கள் அதிரடியாக விளையாட முயன்று ஒற்றை இலக்கங்களில் அவுட்டாகி வெளியேறினர். மற்றொரு பக்கம் ஷான் மசூத் நிதானமாகவும் இறுதி ஓவர்களில் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.

  இறுதியாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில்  8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. ஷான் மசூத் 52 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய அணியில் ஹர்ஸ்திப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

  இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

  Published by:Vijay R
  First published: