ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்தியாவின் கனவு தகர்ந்தது: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து

இந்தியாவின் கனவு தகர்ந்தது: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து

நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்து வீரர்கள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது நியூசிலாந்து அணி.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 12-ல் சுற்றின் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் ஹஸ்ரத்துல்லா ஷாஷாய், முகம்மது ஷாஷத் களமிறங்கினர். ஷாஷாய் 2 ரன்களிலும், ஷாஷத் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குர்பஷ் 6 ரன்களில் ஆட்டமிழந்தார்.

  19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகைள இழந்து ஆப்கானிஸ்தான் தடுமாறியது. குல்பதின் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். நஜிபுல்லா மட்டும் அதிரடியாக ஆடி 48 பந்துகளில் 73 ரன்களைக் குவித்தார். 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்டின் கப்தில், டேர்ல் மிட்செல் களமிறங்கினர்.

  மிட்செல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக ஆடிய கப்தில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேன் வில்லியம்சன், டேவோன் கான்வே நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநேர இறுதியில் வில்லியம்சன் 40 ரன்களுடனும், கான்வே 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐந்து போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை நியூசிலாந்து அணி உறுதி செய்தது.

  ஏற்கெனவே, நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று பாகிஸ்தானும் அரையிறுதி தகுதி பெற்றிருந்தது. இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்ததன் மூலம் இந்தியாவின் அரையிறுதி கனவு முடிவுக்கு வந்தது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Afghanistan, T20 World Cup