ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை தொடர் : யுஏஇ அணியிடம் போராடி வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி!

டி20 உலகக்கோப்பை தொடர் : யுஏஇ அணியிடம் போராடி வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி!

நெதர்லாந்து அணி வெற்றி

நெதர்லாந்து அணி வெற்றி

112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்க்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி தட்டு தடுமாறி தான் வெற்றி இலக்கை எட்டியது .

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAustraliaAustraliaAustraliaAustraliaAustraliaAustraliaAustraliaAustralia

  டி20 உலககோப்பையின் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமீரகத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி வீழ்த்தியது.

  ஆஸ்திரேலியாவில் 8வது டி20 தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் நமீபியா அணி மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தியா , பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளை ஆசிய கோப்பையும் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இலங்கை அணி நமீபியா அணியுடம் படுதோல்வி அடைந்தது.

  இதையும் படிங்க: 2 மாதங்களில் இரண்டு நாட்டிற்கு விளையாடிய கிரிக்கெட் வீரர்! எப்படி அணி மாறினார் தெரியுமா?

  இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அணியும் நெதர்லாந்து அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஐக்கிய அரபு எமீரேட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் முகமது வசீம் அதிகபட்சமாக 41 ரன்களை எடுத்தார். நெதர்லாந்து அணி தரப்பில் வான் மேக்ரீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  இதையும் படிங்க: தோனி தொடங்கி வைத்த வெற்றி! டி20 உலகக்கோப்பையில் இதுவரை வென்ற நாடுகள்!

  112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்க்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி தட்டு தடுமாறி தான் வெற்றி இலக்கை எட்டியது .76 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நெதர்லந்து அணி தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஒரு பந்து மீதம் இருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.19.5 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்களை எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Netherlands, T20 World Cup, UAE