ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

பந்துவீச்சில் அசத்திய ஜடேஜா, அஸ்வின்- 132 ரன்களில் சுருண்ட நமீபியா

பந்துவீச்சில் அசத்திய ஜடேஜா, அஸ்வின்- 132 ரன்களில் சுருண்ட நமீபியா

கோலி, ஜடேஜாவுக்கு ஓய்வு.

கோலி, ஜடேஜாவுக்கு ஓய்வு.

இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் 8 விக்கெட் இழப்புக்கு நமீபியா 132 ரன்கள் எடுத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இந்தநிலையில் இன்று சூப்பர் 12 சுற்றின் இறுதிப் போட்டியில் நமீபியாவுடன் இந்திய அணி மோதிவருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நமீபியா அணியின் சார்பில் பார்ட், மைக்கேல் வான் லிங்கேன் களமிறங்கினர்.

  வான் லிங்கேன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய க்ரேக் வில்லியம்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அரைத் தொடர்ந்து, பார்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இராஸ்மஸ் 12 ரன்களிலும், லோட்டி ஈட்டான் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வீஸ் மட்டும் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். அஸ்வினும், ஜடேஜாவும் போட்டிக் போட்டிக்கொண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

  ஜடேஜா 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். அதனையடுத்து, ஆட்டநேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு நமீபியா அணி 132 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Indian team, T20 World Cup