• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ‘கடினமான கிரிக்கெட் பயணத்தில் தோனி போன்ற ஒரு ‘மென்ட்டார்’ கிடைப்பது அதிர்ஷ்டமே’

‘கடினமான கிரிக்கெட் பயணத்தில் தோனி போன்ற ஒரு ‘மென்ட்டார்’ கிடைப்பது அதிர்ஷ்டமே’

நடுவில் நிழல் பேட்டிங் செய்யும் தோனி.

நடுவில் நிழல் பேட்டிங் செய்யும் தோனி.

கடினமான இந்த கிரிக்கெட் பயணத்தில் எம்.எஸ்.தோனி போன்ற ஒரு நம்பிக்கை ஆலோசகர் கிடைத்திருப்பது பெரும் பாக்கியம் என்று கே.எல்.ராகுல் உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார்.

  • Share this:
    ஐபிஎல் 2021 தொடரில் ஆரஞ்சு தொப்பியை ருதுராஜிடம் இழந்த ராகுல் அன்று இங்கிலாந்துக்கு எதிரான வார்ம்-அப் போட்டியில் 51 ரன்களை விளாசினார். டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மாவுடன் கே.எல்.ராகுல் இறங்குவது இந்திய அணிக்குப் பவர் ப்ளேயில் பெரிய வாய்ப்பாக அமையும்.

    இந்த உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய சாதகம் எம்.எஸ்.தோனி அணியில் இணைந்திருப்பது, பிட்ச் உள்ளிட்ட விவகாரம், அணித்தேர்வு, டாஸ் ஜெயித்தால் பேட்டிங்கா பீல்டிங்கா, பவர் ப்ளேயில் ஸ்பின்னரை கொடுக்கலாமா உள்ளிட்ட அனைத்திலும் தோனி ஒரு டி20 எக்ஸ்பர்ட் என்றுதான் கூற வேண்டும். இதைத்தான் கே.எல்.ராகுலும் அங்கீகரித்து கூறுகிறார்.

    மேலும் தோனியினால் முக்கியப் பயன் என்னவெனில் ஓய்வறையில் ஒரு அமைதியான சூழ்நிலை, ஒரு கூலான நிலைமை சாத்தியம் இதையும் கே.எல். ராகுல் அங்கீகரிக்கிறார். முதலில் உலகக்கோப்பையை வெல்ல வேண்டுமெனில் டென்ஷன், பிரஷர் ஆகியவற்றை அகற்ற வேண்டும். தோனியின் அணுகுமுறை இதுதான், தோற்றாலும் பரவாயில்லை ஃபைட் கொடுப்போம் என்ற அணுகுமுறையை தோனி வளர்ப்பார்.

    இந்நிலையில் கே.எல். ராகுல் கூறியதாவது: எம்.எஸ்.தோனி மீண்டும் அணிக்குள் இருப்பது பிரமாதமான ஒரு விஷயம். அவர் கேப்டன்சியில் ஆடியிருக்கிறோம், அவர் கேப்டனாக இருக்கும்போதே எங்களுக்கெல்லாம் நம்பிக்கை ஆலோசகர்தான். அவர் கேப்டனாக இருக்கும் போது ஓய்வறை கலகலப்பாக இருக்கும். அவரது அமைதி எங்களுக்குப் பிடிக்கும்.

    அவருடன் நேரம் செலவிடுவதை நான் மகிழ்ச்சியுடன் தான் செய்துள்ளேன். அவருடன் நேரம் செலவிடுவது ஒரு கேளிக்கைதான். கிரிக்கெட் பற்றி அவர் மூளையைக் கசக்குவதை எதிர்நோக்குகிறேன். கேப்டன்சி, கிரிக்கெட் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன், என்றார் ராகுல்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: