ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

T20 World Cup: கிறிஸ் கெய்லின் 6 ஆண்டுகால சாதனையை உடைத்த பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்

T20 World Cup: கிறிஸ் கெய்லின் 6 ஆண்டுகால சாதனையை உடைத்த பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான்

கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்த ரிஸ்வான்

கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்த ரிஸ்வான்

ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று ஸ்காட்லாந்து அணியை பாகிஸ்தான் ஊதியது, இதில் கிறிஸ் கெய்லின் டி20 சாதனையை முறியடித்துள்ளார் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான். இந்தச் சாதனையை கெய்ல் 6 ஆண்டுகாலமாக வைத்திருந்தார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று ஸ்காட்லாந்து அணியை பாகிஸ்தான் ஊதியது, இதில் கிறிஸ் கெய்லின் டி20 சாதனையை முறியடித்துள்ளார் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான். இந்தச் சாதனையை கெய்ல் 6 ஆண்டுகாலமாக வைத்திருந்தார்.

  நேற்று முகமது ரிஸ்வான் சோபிக்கவில்லை ஒரு சிக்சருடன் 15 ரன்கள் எடுத்து ஸ்காட்லாந்து பவுலர் ஹம்சா தாகீரிடம் வீழ்ந்தார். பாபர் அசாம் 47 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் விளாசினார். முகமது ஹபீஸ் 19 பந்தில் 31 ரன்கள் விளாச ஷோயப் மாலிக் தன் வயதையும் மீறிய ஃபுல் பிட்னெஸ் இன்னிங்சில் 18 பந்துகளில் 1 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 54 ரன்கள் விளாசினார். இதனையடுத்து பாகிஸ்தான் அணி 189/6 என்று இமாலய இலக்கை நிர்ணயித்தது.

  தொடர்ந்து ஆடிய ஸ்காட்லாந்து 117/6 என்று முடிந்தது. ஸ்காட்லாந்து வீரர் ரிச்சி பெரிங்டன் 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். மிகப்பெரிய இன்னிங்ஸ். ஸ்காட்லாந்து 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

  இதில் 15 ரன்கள் எடுத்த ரிஸ்வான் 2021ம் ஆண்டு அனைத்து டி20 கிரிக்கெட்டிலும் 1676 ரன்களை எடுத்துள்ளார், சர்வதேச கிரிக்கெட், மற்றும் தனியார் கிரிக்கெட் இரண்டிலும் சேர்த்து 1676 ரன்களை எடுத்துள்ளார் ரிஸ்வான்.

  கிறிஸ் கெயில் 2015ம் ஆண்டு அனைத்து டி20 கிரிக்கெட்டிலும் 1665 ரன்கள் எடுத்திருந்ததை முறியடித்துள்ளார் ரிஸ்வான். 2016-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்தியா கேப்டன் விராட் கோலி 973 ரன்களை எடுத்த போது மொத்தம் 1614 ரன்களை எடுத்தார். 2019-ல் பாபர் அசாம் 1607 ரன்களையும், இதே 2019-ல் ஏ.பி.டிவில்லியர்ஸ் 1580 ரன்களையும் மீண்டும் 2021-ல் பாபர் அசாம் 1561 ரன்களையும் அனைத்து டி20க்களில் எடுத்துள்ளனர்.

  இதில் மிகவும் ஆச்சரியமென்னவெனில் 2009-ல் அறிமுகமாகும் ரிஸ்வான் 2020 வரை டி20 கிரிக்கெட்டில் 2029 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். 2021-ல் பாகிஸ்தான் அணியின் இன்றியமையாத விக்கெட் கீப்பர் பேட்டர் ஆனதோடு உலகின் தலை சிறந்த டி20 கிரிக்கெட் ஒப்பனர்கள் பட்டியலிலும் இணைந்தார்.

  பாபர் அசாமும் ரிஸ்வானும் 2021-ல் மட்டும் 4 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர். இதில் அன்று இந்தியப் பந்துவீச்சுக்கு எதிராக எடுத்த 152 ரன்கள் அதிகமாகும். ஒட்டுமொத்தமாக இருவரும் 5 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர். டி20 கிரிக்கெட்டில் அதிக சதக்கூட்டணி அமைத்த ஜோடி இவர்கள்தான். ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவானுடன் இணைந்து 4 முறை சதக்கூட்டணி அமைத்துள்ளனர்.

  பாகிஸ்தான் சூப்பர் லீகில் முல்டான் சுல்தான் அணிக்கு ரிஸ்வான் கேப்டன் கடந்த சீசனில் 12 இன்னிங்ஸில் 500ரன்களை விளாசியுள்ளார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Chris gayle, T20 World Cup