ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்... அயர்லாந்திடம் படுதோல்வி

டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்... அயர்லாந்திடம் படுதோல்வி

IRE vs WI

IRE vs WI

T20 World Cup | டி20 உலகக்கோப்பையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரைவிட்டு வெளியேறி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  டி20 உலகக்கோப்பையை இரண்டு முறை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளது. தகுதி சுற்றில் ஸ்காட்லாந்து மற்றும் ஐயர்லாந்து உடன் தோல்வி அடைந்ததால் வெஸ்ட் இண்டீஸ் தொடரை விட்டு வெளியேறி உள்ளது.

  டி20 உலகக் கோப்பை 2022 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்ற நிலையில் மற்ற அணிகளுக்கு தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் ஏ பிரில் இலங்கை மற்றும் நெதலார்ந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

  இந்நிலையில் குரூப் பி பிரிவில் அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று  முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி  20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் பிரான்டன் கிங் 62 ரன்கள் எடுத்தார்.

  Also Read : பிசிசிஐ ஒரு.... பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் அஃப்ரிடி காட்டமான பதிவு

  இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியின் தொடக்க வீரர் பவுல் ஸ்ட்ரிலிங் 66 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியின் மூலம் அயர்லாந்து டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

  டி20 உலகக்கோப்பையில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரைவிட்டு வெளியேறி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தகுதி சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் உடன் தோல்வியை சந்தித்துள்ளது. டி20 போட்டிகளில் அதிரடிக்கு பெயர் போன வெஸ்ட் இண்டீஸ் நடப்பு உலகக்கோப்பை தொடரில் வெளியேறியது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: T20 World Cup