Home /News /sports /

இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் ஒரு இடத்துக்கு இத்தனை போட்டியா?

இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் ஒரு இடத்துக்கு இத்தனை போட்டியா?

இந்திய அணி

இந்திய அணி

டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் போய்க்கொண்டிருக்கிறது, இளம் வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்தை ஆடத்தெரியாமல் அவுட் ஆகி வருகின்றனர், டெஸ்ட் அணி இந்தியக் குழிப்பிட்சை நம்பியிருக்கும் நிலையில் டி20 அணியில் பவுலிங், பேட்டிங்கில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

மேலும் படிக்கவும் ...
    டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் போய்க்கொண்டிருக்கிறது, இளம் வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்தை ஆடத்தெரியாமல் அவுட் ஆகி வருகின்றனர், டெஸ்ட் அணி இந்தியக் குழிப்பிட்சை நம்பியிருக்கும் நிலையில் டி20 அணியில் பவுலிங், பேட்டிங்கில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.

    பேட்டிங்கில் எடுத்துக் கொண்டால் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், தீபக் ஹூடா, விராட் கோலி, சூரியகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் என்று டைட்டாக உள்ளது. என்று இடம் சரியாக இருக்கிறது, பவுலிங்கிலும் டி20 உலகக்கோப்பையை எடுத்துக் கொண்டால் பும்ரா பெயரை எப்போதும் ஒதுக்க முடியாது, இவருடன் புவனேஷ்வர் குமார் இன்று சிறந்த டி20 நியூபால் பவுலர், டெத் ஓவர்களிலும் புவனேஷ்வர் குமார் அசத்தி வருகிறார்.

    இவர்களுடன் ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ஜடேஜா சேர்க்கப்படலாம், ஸ்பின்னருக்கான இடத்தை செஹல் நிரப்புகிறார். இப்போது ஆஸ்திரேலியா பிட்ச்களில் தேவைப்படும் என்றால் இன்னொரு வேகப்பந்து வீச்சாளருக்கு இடமுள்ளது, ஆனால் அதற்கான இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. அர்ஷ்தீப் சிங், உம்ரன் மாலிக், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, அனைவருக்கும் மேலாக முகமது ஷமி ஆகியோர் போட்டியில் இருக்கின்றனர். இவர்களோடு மிக முக்கியமாக தீபக் சாஹர் வேறு காத்திருக்கிறார் இவரும் ஒரு ஆல்ரவுண்டர் என்பது கவனிக்கத்தக்கது.

    ஒரு இடத்துக்கு இத்தனை போட்டியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் அக்சர் படேல் வேறு ஒரு புறம் தொக்கிக் கொண்டு நிற்கிறார், சஞ்சு சாம்சன் 77 ரன்களை பிரமாதமாக எடுத்து விட்டு வாய்ப்பில்லாமல் தவிக்கிறார். இன்னும் மோசின் கான் என்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர், ராகுல் திவேத்தியா போன்ற பினிஷர் ஆகியோர் லைனில் காத்திருக்கின்றனர்.

    பேட்டிங்கில் பிரிதிவி ஷா, ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. என்ன செய்யப் போகிறார்கள் தேர்வுக்குழுவினர்.

    நம்மைக் கேட்டால், இந்த முழு திறமைகளில் ஒன்றிரண்டு பேரை டெஸ்ட்டில் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ஹனுமா விஹாரிக்குப் பதில் இறக்கி இங்கிலாந்து போல் டி20 பாணியில் ஆட வைத்து முயற்சித்துப் பார்க்கலாம்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: T20 World Cup, Team India

    அடுத்த செய்தி