• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ரோஹித், ராகுல் அரைசதம்- ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது இந்தியா

ரோஹித், ராகுல் அரைசதம்- ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது இந்தியா

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

நமீபியாவுக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

  • Share this:
    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இந்தநிலையில் இன்று சூப்பர் 12 சுற்றின் இறுதிப் போட்டியில் நமீபியாவுடன் இந்திய அணி மோதியது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நமீபியா அணியின் சார்பில் பார்ட், மைக்கேல் வான் லிங்கேன் களமிறங்கினர்.

    வான் லிங்கேன் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய க்ரேக் வில்லியம்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அரைத் தொடர்ந்து, பார்ட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இராஸ்மஸ் 12 ரன்களிலும், லோட்டி ஈட்டான் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். வீஸ் மட்டும் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். அஸ்வினும், ஜடேஜாவும் போட்டிக் போட்டிக்கொண்டு விக்கெட்டுகளை எடுத்தனர்.

    ஜடேஜா 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். அதனையடுத்து, ஆட்டநேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு நமீபியா அணி 132 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக ஆடினர். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜன் ப்ரைலின்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சூர்யாகுமார் யாதவ் களமிறங்கினார்.

    அவரும் அதிரடியாக ஆடினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார். சிறப்பாக ஆடிய இந்திய அணி 15.2 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆட்டநேர இறுதியில் கே.எல்.ராகுல் 54 ரன்களிலும், ரோஹித் சர்மா 56 ரன்களிலும் களத்தில் இருந்தனர். அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத நிலையில் இந்த வெற்றி இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றியாக அமைந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: