ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Sco | ஏழாவது ஓவரில் ஆட்டத்தையே முடித்த இந்தியா... புள்ளிப்பட்டியலில் அதிவேக முன்னேற்றம்

Ind vs Sco | ஏழாவது ஓவரில் ஆட்டத்தையே முடித்த இந்தியா... புள்ளிப்பட்டியலில் அதிவேக முன்னேற்றம்

Ind vs Sco

Ind vs Sco

டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவு போட்டியில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸ்க்கு பின் பேசிய விராட் கோலி, எனது பிறந்தநாளில் டாஸ் வென்றுள்ளேன். எனது பிறந்தநாள் அன்று விளையாடும் முதல் போட்டி இது என்று சிரித்தப்படியே கூறினார். மேலும் சர்துல் தாகூருக்கு பதிலாக மூன்றாவது சூழற்பந்து வீச்சாளராக வருண் சக்கரவர்த்தியை அணியில் சேர்த்துள்ளதாக தெரிவித்தார்.

  இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்காமல் திணறியது. டாப் ஆர்டர் மேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் பெலியன் திரும்பியதால் அந்த அணி சொற்ப ரன்களில் சுருண்டது. 17.4 ஓவர்களில் ஸ்காட்லாந் அனைத்து விக்கெட்களையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது ஷமி தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

  86 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஸ்காட்லாந் பந்துவீச்சை சிதறவிட்டது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் அதிரடியால் ரன்ரேட் சரசரவென எகிறியது. இந்திய அணி 5 ஓவர்களில் 70 ரன்களை எட்டியது. ரோஹித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

  மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் 19 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் அடித்த நிலையில் பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இறுதியாக 6.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது.

  இந்திய அணியின் அபார வெற்றியை தொடர்ந்து குரூப் 2 பிரிவில் ஆப்கானிஸ்தான் ரன்ரேட்டை விட முன்னிலையில் உள்ளது. நவம்பர் 7-ம் தேதி நடைபெறும் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் வெற்றியின் மூலமே அரையிறுதிக்கு யார் முன்னேறுவார்கள் என்பது தெரியவரும்.

  Published by:Vijay R
  First published:

  Tags: T20 World Cup