ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

Ind vs Pak | மெல்போர்னில் மழை பெய்ய 91 சதவீத வாய்ப்பு.. வானிலை, பிட்ச் ரிப்போர்ட்

Ind vs Pak | மெல்போர்னில் மழை பெய்ய 91 சதவீத வாய்ப்பு.. வானிலை, பிட்ச் ரிப்போர்ட்

 வானிலை, பிட்ச் ரிப்போர்ட்

வானிலை, பிட்ச் ரிப்போர்ட்

India vs Pakistan Weather Report | இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஞாயிற்று கிழமை மெல்போர்னில் 18 டிகிரி வெயிலும் மேக மூட்டமாக இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ள இந்த போட்டியில் மழை குறிக்கிட அதிகப்பட்ச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியின் ஓவர்கள் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண மெல்போர்ன் மைதானத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கூடி உள்ள நிலையில் வானிலை இன்றையப் போட்டிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.

    வானிலை ரிப்போர்ட் :

    இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஞாயிற்று கிழமை மெல்போர்னில் 18 டிகிரி வெயிலும் மேக மூட்டமாக இருக்கும். நாள் முழுவதும் சீரற்ற மழை மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. போட்டியில் மழை குறுக்கிட 91 சதவீத வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் 15 கி.மீ என கணக்கிடப்பட்டுள்ளது.

    பிட்ச் ரிப்போர்ட் :

    மெல்போர்ன் மைதான பிட்ச் அமைப்பு பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிற்கும் சாதகமாக அமையும். முதலில் பந்துவீசும் அணியின் வேகப்பந்துக்கு நல்ல ஸ்வீங் மற்றும் பவுன்ஸ் ஆக வாய்ப்பிருக்கும். மேகமூட்டமான சூழ்நிலையில், பந்து ஸ்விங் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுன்ஸ் சீராக இருக்கும் மற்றும் பேட்டர்கள் அவர்களின் ஷாட்களுக்கு மதிப்பு கிடைக்கும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மெல்போரன் சாதகமாக இருக்காது. இந்த மைதானத்தில் இந்தியா நான்கு டி20 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும், ஒன்று கைவிடப்பட்டது.

    Also Read : பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்குமா? கேப்டன் ரோகித் சர்மா சொன்ன கூல் பதில்

    கடந்த 2021 டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், இந்திய அணி தயாராகியுள்ளது. இதற்காக, ஆடும் லெவனை ஒரு வாரத்திற்கு முன்பே தேர்வு செய்ததாக கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். கடைசியாக இரு அணிகளும் மோதிய இரண்டு போட்டிகளில், தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இதனால், உலகக்கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதும் தொடக்க போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உத்தேச இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்டிக் பாண்டியா, திணேஷ் கார்த்திக்(வி.கீ), அக்ஷர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஹர்சல் படேல், ஹர்ஷ்திப் சிங்

    உத்தேச பாகிஸ்தான் அணி : முகமது ரிஷ்வான் (வி.கீ), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், முகமது நவாஸ், இப்திகார் அகமது, ஷான் மசூத், ஆசிப் அலி, ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்

    Published by:Vijay R
    First published:

    Tags: India vs Pakistan, T20 World Cup