ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நண்பேண்டா..! விராட் கோலியை அலேக்காக தூக்கி கொண்டாடிய ரோஹித் சர்மா

நண்பேண்டா..! விராட் கோலியை அலேக்காக தூக்கி கொண்டாடிய ரோஹித் சர்மா

ரேஹித் சர்மா - விராட் கோலி

ரேஹித் சர்மா - விராட் கோலி

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து விராட் கோலியை தோளில் தூக்கி ரோஹித் சர்மா கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது. கிரிக்கெட் உலகில் தான் ஒரு கிங் என்பதை மீண்டும் ஒரு முறை விராட் கோலி மீண்டும் நிரூபித்துள்ளார். மழை குறுக்கீடு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மெல்போர்ன் மைதானத்தில் ரன் மழையால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் விராட். கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்திய அணி பெற்ற தோல்விக்கு மெல்போர்னில் பதிலடி கொடுத்துள்ளனர்.

சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட மெல்போரன் மைதானம் இரு நாட்டு ரசிகர்களின் படையால் அரங்கமே நிறைந்து இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பாபர் ஆஷம், ரிஷ்வான் சொற்ப ரன்கிளில் அவுட்டான போதும் அதற்கு அடுத்து வந்த ஷான் மசூத் மற்றும் இப்திகார் அகமது பார்ட்னர்ஷிப் அமைத்து நிலையாக ஆடினார்கள். இருவரும் அரைசதம் கடந்தால் பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி 160 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா இருவரும் 4 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த வந்த சூர்யகுமார் 15 ரன்னிலும் அக்ஷர் படேல் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இதனால் இந்திய அணி 31 ரன்களில் 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அதன்பின் விராட் கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியா சிறப்பான பார்ட்டனர்ஷிப் அமைத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்திய அணி நிதானமாக விளையாடி வந்ததால் 10 ஓவர்களில் 45 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அதற்கு பின் விராட் கோலி டாப் கியரில் பேட்டை சுழற்ற ஆரம்பிக்கவும் ரன் ரேட் அதிகரிக்க ஆரம்பித்தது. ஹர்திக் பாண்டியா அதிரடி காட்ட எடுத்த முயற்சிகள் தோல்வியாகவே இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய மைதானங்களில் அனுபவம் வாய்ந்த கோலி முன் பாகிஸ்தானின் வேகம் எடுபடவில்லை என்றே சொல்லலாம்.

கடைசி 3 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என இருந்த போதும் விராட் கோலி சற்றும் தடுமாறமால் எந்த பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்ற தனது வித்தையை வெளிப்படுத்தி பவுண்டரிகளை விளாசினார். கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்டிக் பாண்டியா முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார். ஹர்டிக் 37 பந்துகளில் 40 ரன்களே மட்டுமே சேர்த்தார். இந்திய மைதானங்களில் அவருக்கு கைகொடுத்த ஷாட் எதுவும் மெல்போர்னில்  எடுபடவில்லை.

ஆனால் விராட் கோலியின் அனுபவ ஆட்டத்தால் சிக்ஸர்கள் உடன் கடைசி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. கிங் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். கடைசி பந்தை ரவிசந்திரன் அஸ்வின் தூக்கி அடித்து இந்திய அணி வெற்றி பெற செய்ததும் சக வீரர்கள் மைதானத்திற்குள் வந்து விராட் கோலியை கட்டி தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலியை தனது தோளில் தோக்கி சுற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தளபதில் படத்தில் ரஜினியை மம்மூட்டி தூக்கும் அந்த காட்சி தான் சில நொடிகள் நம் கண்முன் வந்துபோகும்.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. மெல்போர்ன் மைதானத்தில் திரண்ட ரசிகர்களுக்கு இந்த போட்டி மிகப்பெரிய விருதாக அமைந்தது. மொத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணி சிறப்பான தீபாவளி பரிசை வழங்கி உள்ளது.

Published by:Vijay R
First published:

Tags: India vs Pakistan, T20 World Cup